உள்ளாட்சித் தேர்தல் விரைவில்!

-நஜீப்-

நமது பிரதான கட்டுரையில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் ஒன்றுக்கான வாய்ப்பு இருப்பதாக கடந்த வாரம் எழுதி இருந்தோம்.

அதன் படி சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் தினேஷூம் தேர்தல் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவாவும் நமது கருத்தை உறுதி செய்து மார்ச் மாதத்துக்கு முன்னர் இந்தத் தேர்தல் நடக்கும் என்று உறுதி செய்திருக்கின்றார்கள்.

அதே நேரம் நாட்டில் பசி பஞ்சம் பொருளாதார நெருக்கடி காகித தட்டுப்பாடு என்று இருக்கின்ற நேரம் எப்படித் தேர்தலை நடாத்துவது என்று இராஜாங்க அமைச்சர் கனக்க ஹேரத் கேட்டிருக்கின்றார்.

அவரது இந்தக் கதையில் இருந்து மொட்டுக் கட்சி தேர்தலுக்கு ஆப்பு வைக்கவும் வாய்ப்பு இருக்கின்றது.

அதே நேரம் ஜனாதிபதி ரணிலும் இந்தத் தேர்தலை விரும்பமாட்டார். புதிதாக தேர்தல் ஒன்று நடந்தால் தன்னுடன் இருக்கின்ற ஐ.தே.க உள்ளாட்சி உறுபினர்களையும் அவர் இழக்க வேண்டி வரும் என்ற அச்சம் நமது சந்தேகத்துக்கு அடிப்படையாக இருக்கின்றது.

 நன்றி: 25.09.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

சம்பந்தன் நீக்கமும் மறுப்பும்!

Next Story

எட்வர்டு ஸ்னோடெனுக்கு ரஷ்யா குடியுரிமை