உலமா சபையின் பேரில் விஷப் பிரச்சாரம் ரஹ்மான் எம்பி என்ன சொல்கின்றார்.?

நேற்று (19.09.2024) உலமா சபையின் பேரில் வெளியான போலிப் பிரச்சாரம் தொடர்பாக எதிரும் புதிருமான கதைகள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் முன்னெடுக்கப்படுகின்றது.

இது தொடர்பாக என்பிபி. முக்கியஸ்தர்களும் நம்மைத் தொடர்பு கொண்டு பேசினார்கள். அவர்கள் இந்த விவகாரத்தை சட்ட நடவடிக்கைகளுக்கு முன்னெடுத்துச் சென்றிருக்கின்றார்கள்.

அடுத்து இது தொடர்பாக குறிப்பிட்ட அனுராதபுர மாவட்ட இஷhக் ரஹ்மான் எம்.பி.யை நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது அப்படி ஏதுவும் தனது முகநூல் பக்கத்தில் இருந்து வெளியாகவில்லை. நீங்கள் வேண்டுமானால் தேடிப்பாருங்கள் என்று நமக்கு சவால் விட்டார்.

அப்போது அது உங்கள் கையடக்கத் தொலைபேசி-முகநூல் பக்கத்தில் இருந்துதான் பகிரப்பட்டிருக்கின்றது.

அதற்கான ஆதரங்கள் எம்மிடமும் இருக்கின்றது என்பிபி. தலைவர்கள் கரங்களிலும் இருக்கின்றது என்று நாம் சுட்டிக் காட்டிய போது எனது கையடக்கத் தொபேசியை பலர் பாவிக்கின்றார்கள் என்ன நடந்ததோ தெரியாது என்று தொலைபேசியை தூண்டித்து விட்டார்.

பின்னர் இந்த குறிப்பை தயாரிக்கும் முன்னர் அவருக்கு நெருக்கமான ஒருவர் ஊடாக அவரைத் தொடர்பு கொண்டு விவகாரத்தை குறிப்பிட்டு மேலும் தகவல் பெற முயன்ற போது ரஹ்மான் எம்.பி. நமக்குக் கூறிய தனது கையடக்கத் தொலைபேசியை பலர் பாவிக்கின்றார்கள் என்ற கதையைத்தான் அவரிடத்திலும் கூறி இருந்தார்.

அவர் கதை உண்மையாக இருந்தாலும் அனுராவுக்கு எதிரான இந்த விசமத்தனமான பரப்புரைக்கு சட்ட ரீதியாக யார் பதில் சொல்ல வேண்டும் என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். இப்போது அவரது முகநூல் பக்கத்திலிருந்து அந்த போலிச் செய்தி நீக்கப்பட்டிருக்கின்றது.

அடுத்து இதே போலிச் செய்தியை ஒருவர் எமக்கும் அனுப்பி வைத்திருந்தார். அதனை நமக்கு அனுப்பியவரை தொடர்பு கொண்டு தேடிப்பார்த்தால் கண்டியில் உள்ள ஒரு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஒருவரின் தம்பியான மௌலவி ஒருவர்தான் இதனை நமக்கு அனுப்பி இருந்தார் என்பதை உறுதி செய்து கொள்ள முடிந்தது.

இந்தப் போலியான செய்தி தொடர்பாக அவரைக் கோட்டால் தனது கையடக்கத் தொலைபேசியிலிருந்து எந்த செய்தியும் யாருக்கும் அனுப்பி வைக்கப்படவில்லை என்று அவரும் முதலில் மறுத்தார்.

ஆனால் அவரது தொலைபேசியில் இருந்ததுதான் இது நமக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று நாம் நிரூபித்த போது. எனக்கு யாரோ அனுப்பி வைத்ததைதான் நான் அனுப்பி இருப்பேன் என்று கூறி தொடர்பபை தூண்டித்து விட்டார்.

இப்படியான பாரதூரமான ஒரு அபாண்டத்தை தமது அமைப்பின் பேரில் அனுப்பி இருப்பது பற்றி இதுவரை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இதுவரை விளக்கம் கொடுக்காமல் இருப்பதும் ஆச்சர்யமாக இருக்கின்றது.

அல்லது இதில் அவர்களுக்கும் பங்கிருக்கின்றதா என்று முஸ்லிம்களும் ஏனையோரும் சிந்திக்க வேண்டி இருக்கின்றது. எப்படி இருந்தாலும் இது ஒரு பாரதூரமான குற்றச் செயல்.

-நஜீப் பின் கபூர்
தினக்குரல் அரசியல் ஆய்வாளர்
(ஸ்ரீ லங்கா கார்டியன் நியூஸ் கொம். மற்றும்
கார்டியன் நியூஸ் செய்தித்தாள் என்பவற்றின்
பிரதம ஆசிரியரும்.)

 

 

Previous Story

மொசாடும் அனுர வெற்றியை உறுதி செய்கின்றது

Next Story

ஜனாதிபதித் தேர்தல் 2024 பிந்திய கள நிலவரம்!