இலங்கை தேர்தல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு வரலாற்றுப் பதிவை வைத்திருக்கின்ற உடதலவின்னையில் முதல் முறையாக ஜனாதிபதி அனுர குமார தலைமையிலான என்பிபி. பாராளுமன்றத் தேர்தலுக்கான பணிமனை கலதெனிய சந்தியில் இன்று 31.10.2024 காலை திறந்து வைக்கப்பட்டது.
உடத்தவின்ன வட்டாரக் கிளை தலைவர் ரிப்கி முஸ்தாக் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த காரியாலயத் திறப்பபு விழாவில் கண்டி மாவட்டத்தில் இலக்கம் 14 போட்டியிடுகின்ற என்பிபி. வேட்பாளர் நிமல் ஹேரத்தும் மற்றும் பாததும்பற தொகுதி நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அதுல திசாநாயக்கவும் கலந்து கொண்டிருந்தார்.
வேட்பாளர் நிமல் ஹேரத் இந்த மண்னைச் சேர்ந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த வைபவத்தில் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்ட என்.எல்.எம். ரசீன் என்.எல்.சரீப்தீன் ஆகியோர் முதலிருந்தே (1971) இந்த அமைப்பில் செயல்பட்டவர்கள் என்பதால் அவர்களும் இவ்வைபவத்துக்கு அழைத்துக் கௌரவிக்கப்பட்டிருக்கின்றனர் என்தும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கூட்டம்
அத்துடன் இன்று உடதலவின்ன வைத்தியசாலை அருகில் கண்டி மாவட்ட தலைமை வேட்பாளர் லால் காந்த (வேட்பாளர் இலக்கம்-2) கலந்து கொள்ளும் பொதுக் கூட்டமொன்றும் பி.ப.3.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.