ஈஸ்டர் விசாரணைகள் முடிவு!

நஜீப்

நன்றி:16.08.2026 ஞாயிறு தினக்குரல்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வரவுகள் தரப்பு சாட்சிகள் அனைத்து வாக்குமூலங்களும் கடந்த வியாழன் 13.08.2026 பி.ப.12.40 மணிக்கு முற்றுப் பெற்றிருக்கின்றன.

இதற்கு முன்னர் இந்த வாக்குமூலங்கள் பெற்றுக் கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் முற்றுப் பெற்றிருந்ததாக சொல்லப்பட்டிருந்தது.

அதில் எந்த உண்மைகளும் கிடையாது. வழக்கு மாரசிங்ஹ, கண்ணன், நிசங்க என்ற நீதிபதிகள் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் இந்த வழக்கில் இருந்த நீதிபதிகள் பலர் வெளியேறி இருந்தனர்.

இந்த வழக்கு 2021.08.10ம் திகதி தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எண்ணிக்கை 25. (ஒருவர் மரணம்) சுரேஸ் சலே, ரோஹான் குனரத்த  ஆகியோர் குறிப்பிட்ட வழக்கில் முதலாம் இரண்டாம்  சாட்சிகளாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் பின்பு அவர்கள் விலக்கிக் கொள்ளப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இன்னும் பல டசன் கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

Previous Story

නාමල් රාජපක්ෂට,හොර නීති උපාධිය දුන්, විදුහල්පතිට මහින්ද රාජපක්ෂ අල්ලස් දීලා.

Next Story

இயலாத நிலையில் அமெரிக்கா ஈரான் அணு குண்டை கைவிட்டதாக பல்டி