*****யூசுப் என் யூனுஸ்*****
காமெனி மீது பலி தீர்த்கும் விபரீத ஆசை
ஈரானை அடிப்பது பெரிய அழிவைத் தரும்
ஈரான் ஆட்சி மாற்றம் இஸ்ரேலுக்கு தேவை
*****

“விவகாரத்தை நடுநிலையாக பேசுவதற்கு
பார்ப்பதற்கு ஆட்களே இல்லையோ
என்ற நிலையில்தான் இந்த விவகாரம்
சர்வதேச அரங்கிலும் நாட்டிலும்
விவாதிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது.
அரசியல் மற்றும் மதவாத சிந்தனைக்கு
அப்பால் விவகாரத்தை பேச நாம்
ஒரு முயற்சியை மேற்கொள்கின்றோம்.”
*****

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் கடந்த சில தினங்கள் மிகவும் நெருக்கடியான ஒரு நிலை உலகில் காணப்பட்டது. நாம் அமெரிக்க-ஈரான் கொதிநிலை பற்றித்தான் இங்கு சுட்டிக் காட்டுக்கின்றோம். அமெரிக்க அதிபர் என்ன செய்கின்றார் ஈரான் ஆன்மிகத் தலைவர் என்ன சொல்கின்றார் என்பதற்கெல்லாம் அப்பால் ஊடகங்கள் குறிப்பாக சமூக ஊடகங்கள் இதுபற்றிச் சொல்லிக் கொண்டிருந்த செய்திகளை கதைகளை ஒரு முறை நினைத்துப்பாருங்கள். தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புத்தான் அங்கு கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது.
எந்த ஒரு விவகாரத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் மனிதனுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பு என்ற ஒன்று இருக்கும். அதனை மையமாக வைத்துத்தான் குறிப்பிட்ட விடயத்தில் அவனது உணர்வுகளும் செயல்பாடும் விமர்சனங்களும் அமையும். நாம் என்ன சொல்ல வருகின்றோம் என்பது சிலருக்கு விளங்கிக்கொள்வது சற்று சிரமமாக இருக்கலாம்.
நமது தெளிவு அதனைச் சரி செய்யலாம் அல்லது சரி செய்யாமலும் போகலாம். நேரடியாக அமெரிக்க-ஈரான் விவகாரத்துக்கு வருவோம். ஈரானை அடித்து நொருக்க வேண்டும் சாம்பலாக்க வேண்டும் என்று விருப்புடைய ஒரு தரப்பினர் உலகம் பூராவிலும் இருக்கின்றார்கள். அதே போன்று சண்டித் தனம் பண்ணுகின்ற இந்த அமெரிக்காவுக்கு குறிப்பாக ட்ரம்பின் கண்ணத்தில் ஈரான் அறைய வேண்டும். அதனை நாம் வேடிக்கை பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றவர்களும் இருக்கின்றார்கள்.
இதனை இன்னும் விளக்கமாக சொல்வதாக இருந்தால் ஈரான் விவகாரத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கொலை வெறியில் இருக்கின்றன. அதற்குக் காரணம் பிராந்தியத்தில் ஈரானின் ஆயுத பலம் இஸ்ரேலின் இருப்பைக் கேள்விக்குறியாக்கி வருகின்றது. அந்தவகையில் ஈரானின் முழுகொழும்பை உடைக்க வேண்டிய தேவை இஸ்ரேலுக்கு நிச்சயம் உருவாகி இருக்கின்றது. அதனை செய்ய அமெரிக்கா அவர்களுக்குப் பக்க துணையாக இருக்கவும் எதிர்பார்க்கின்றது.
இன்று உலகில் மிகப் பெரிய வல்லரசு அமெரிக்கா. அவர்களை மீறிய ஈரான் செயல்பாடுகள் அவர்களால் ஜீரணிக்க முடியாது இருக்கின்றது. ஈரானின் அடங்காமை அமெரிக்காவுக்கு குறிப்பாக அதிபர் ட்ரம்புக்கு ஒரு கௌரவப் பிரச்சனையாகவும் இருக்கின்றது. எனவே ஈரானைத் தட்டி வைக்க டரம்ப் எதிர்பார்க்கின்றார். ஆனால் நமது பார்வையில் முதுகெழும்பை உடைக்கின்ற நிலையிலும் அடிவாங்குகின்ற நிலையிலும் இன்றைய ஈரான் இல்லை என்றுதான் தெரிகின்றது. கடந்த பண்ணிரெண்டு நாள் போரில் இது வெளிப்பட்டது.
ஈரானுக்கு எதிரான செயல்பாடுகளில் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் வாய்ப்பாக உள்ள காரணிகள் என்று பார்த்தால் பிராந்தியத்தில் உள்ள அரபு நாடுகள் ஈரான் பிராந்தியத்தில் வல்லரசாக வருவதை விரும்பவில்லை. இவர்கள அமெரிக்காவைப் போலத்தான் ஈரானைத் தட்டிவைக்க எதிர்பார்க்கின்றார்கள். குறிப்பாக இஸ்லாமிய உலகில் சவூதி அரேபிய ஆட்சியாளர்கள் ஈரான் தாக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். பகிரங்கமாக சொல்லவும் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் ஒத்துழைக்கவும் சவுதி ஆட்சியாளர்கள் பயப்படுகின்றார்கள்.

இது உள்நாட்டில் பெரிய நெருக்கடியைக் கொண்டுவரும் என்பதனை அவர்கள் அறிவார்கள். ஜோர்தான் குவைத் ஐக்கிய அரசு எமிரேட் எகிப்து பஹ்ரைன் ஆசர்பைஜான் போன்ற நாடுகளின் ஆட்சியாளர்களும் ஈரான் விவகாரத்தில் ஏறக்குறைய இந்த மனநிலையில்தான் இருக்கின்றார்கள். ஆனால் அங்கும் குடிமக்கள் மனநிலை இதற்கு நேர் மாற்றமாக இருக்கின்றது. இதற்கிடையே ஈரானின் நேச நாடாக இருந்த சிரியாவில் இன்று அமெரிக்க-இஸ்ரேல் சார்பு ஆட்சி நடக்கின்றன.
இதுவரை அமெரிக்காவில் பதவியில் இருந்த ஆட்சியாளர்களில் ட்ரம்ப் நிறையவே வித்தியாசமான ஒரு மனிதன். சில நேரங்களில் அவர் ஒரு சர்வாதிகாரியாகவும் கோமாளியாகவும் இன்னும் சில நேரங்களில் மிகப் பெரிய வம்பனாகவும் ஏன் மனநோயாளி போலவும் ட்ரமப்; நடந்து கொள்கின்றார். வெனிசுவேல விவகாரத்தை எடுத்துக் கொண்டால் அங்கு ஜனாதிபதி மதரோவைக் கடத்திச் சென்றது.
நான்தான் இப்போது வெனிசுவேல அதிபர் என்று பேசுவது. கிரின்லாந்து மற்றும் கனடாவைக் கூட தன்னுடன் இணைத்துக் கொள்வது பற்றிய அவரது கருத்துக்கள். ஒரு பாதாள தலைவன் அல்லது தெருச்சண்டியன் போலத்தான் ஒரு பொறுப்பான ஒரு நாட்டின் தலைவர் நடந்து கொண்டு வருகின்றார். மேலும் தான் அமெரிக்கா மக்களின் நலன்களை மையமாகக் கொண்டுதான் இப்படி எல்லாம் சிந்திப்பதாகவும் செயல்படுவதாகவும் அவர் கூறுவதுடன் அதனால் அவர்கள் என்னைத்தான் ஆதரிப்பார்கள் என்றும் ஒரு முறை கூறி இருக்கின்றார்.
தனது நாட்டுத் தலைவர் இப்படி எல்லாம் பேசுவது செயல்படுவது எந்தளவு ஏற்புடையது என்று அமெரிக்க மக்கள் யோசிப்பதாகவோ கவலைப்படுவதாகவோ நமக்குத் தெரியவில்லை. உலக மக்களின் சொத்துக்களை செல்வத்தை கொள்ளையடித்து வயிறு வளர்ப்பதுதான் நாரிகமான வாழ்க்கை என்று அமெரிக்க சமூகமும் சிந்திக்கின்றதோ என்றுதான் நமக்கு எண்ணத் தோன்றுகின்றது.
இன்று சீனா துரிதமாக வளர்ச்சி அடைந்த நாடாக மாறி விட்டது. எறக்குறைய பொருளாதாரத்தில் அவர்கள் அமெரிக்காவுக்கு சமமாக வளர்ந்து விட்டார்கள். எதிர்காலம் கூட அவர்களுக்கு நல்ல வாய்ப்புக்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அதே நேரம் அமெரிக்க உலகில் மிகப் பெரிய ஒரு கடனாளி என்ற நிலையில் இன்று இருக்கின்றது. அந்தக் கடன்களை எல்லாம் திருப்பித் தர முடியாது என்று ட்ரம்ப் சொன்னாலும் ஆச்சரியப்பட ஏதும் இல்லை.
இதனால் சீனாவின் பெருளாதாரத்துக்கு முட்டுக்கட்டை போடுவதற்ககாத்தான் வெனிசுவேல அதிபர் மதுரோ மீதான நடவடிக்கை. இதன் மூலம் அங்குள்ள கனிய வளத்தை ட்ரம்ப் கொள்ளையடிக்க முனைகின்றார். அதனை அவர் பகிரங்கமாகவும் ஒத்துக் கொள்கின்றார். ஈரான் விவகாரத்திலும் மேற்சொன்ன ட்ரம்ப் நியாயங்களுக்கு மத்தியில் சீனாவுக்கான பெற்றோலிய ஏற்றுமதியைத் தடுப்பதும் இவரது முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது.

வெனிசுல ஈரான் பெற்றோலியம் சீனாவின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக இருந்து வருகின்றது. இதனைத் தடுப்பதற்காகத்தான் அமெரிக்க இந்த நாடுகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முக்கியமான ஒரு காரணியாகவும் இருந்து வருகின்றது. உலக இராணுவ வல்லமையை பொருத்தவரையில் அமெரிக்க தலைமையிலான நேட்டோ அணி இருந்து வருகின்றது. ஆனால் ட்ரம்ப் நடவடிக்கைகளினால் அங்கு பெரும் குழறுபடிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அடுத்து ரஸ்யா சீனா வடகொரியா ஈரான் என்பன பலம் வாய்ந்த ஒரு இராணுவக் கூட்டில் இருக்கின்றது. இதில் ஏதாவது ஒரு நாடு தாக்கப்படுமாக இருந்தால் ஏனைய நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
அந்தவகையில் ஈரான் மீதான மிரட்டலை நட்பு நாடுகள் கடுமையாக எதிர்க்கின்றன. அதனால் அவை இந்த நெருக்கடியாக நேரத்தில் ஈரானுக்கு துணையாக நிற்க எதிர்பார்க்கின்றன. அதனால் அவர்கள் ஈரானுக்கு ஆயுத உதவிகளை அள்ளி வழங்கிக் கொண்டு வருகின்றன. ஈரானுக்கு எதிரான சமூக ஊடகங்கள் முன்னெடுத்துச் சென்ற பரப்புரைகளை அந்த அரசு இணையதளங்களை முடக்கித் தடுத்திருந்தது. எலன் மார் இதனை மீண்டும் இலவசமாக வழங்கி கிளர்ச்சிக்காரர்களுக்கு ஒத்துழைப்பை வழங்கி இருந்தார்.
எவரும் எதிர்பார்க்காத வகையில் சீனா தனது தொழிநுட்பத்தின் மூலம் அதனை ஒட்டுமொத்தமாக தடைசெய்து அமெரிக்காவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இப்படி ஒரு தொழிநுட்பம் உலகுக்கு அறிமுகமானது இதுதான் முதல் முறை. ஈரான் மீது தாக்குதல் நடந்தால் நட்பு நாடுகள் வேடிக்கை பார்க்க முடியாது. அவற்றின் ஆளுமையும் வல்லமையும் காட்சிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாகத்தான் இது பார்க்கப்படும். எனவே வேடிக்கை பார்க்கும் நிலைக்கு இவர்கள் போனால் உலகில் அமெரிக்கா தனிக் காட்டுராஜா என்று ஆகிவிடும்.
ரஸ்யா ஈரானுடன் நெருக்கமாக இருந்தாலும் அவர்களுக்கு இஸ்ரேலுடனும் நல்லுறவு இருக்கின்றது. அதன் ஊடாக ஈரானின் ஆயுத வல்லமையை இஸ்ரேல் தெரிந்து வைத்திருக்கின்றது. தன்மீது தாக்குதல் நடாத்தப்படுமாக இருந்தால் தான் திருப்பித் தாக்கின்ற இலக்காக இஸ்ரேல்தான் இருக்கும் என்று அவர்கள் நெடுநாளாக அடித்துக் கூறிக்கொண்டு வருகின்றார்கள். பிராந்தியத்திலுள்ள அரபு இஸ்லாமிய நாடுகளில் அமெரிக்காவின் இராணுவத்தளங்கள் இருக்கின்றன. அதுவும் ஈரான் இலக்காக இருக்கும். எனவே ஈரான் மீது நடக்கின்ற எந்தவொரு தாக்குதலும் பிராந்தியத்தில் பெரும் அழிவை உண்டு பண்ணும். அதனால் தாக்குதல் நடத்தக்கூடாது என்று அந்த அரபு இஸ்லாமிய நாடுகளும் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதனால் ட்ரம்ப் திரிசங்கு நிலையில் இருக்கின்றார்.
இப்போது பிராந்தியத்தில் இருக்கும் பெரும்பாலான இராணுவத் தளங்களை ட்ரம்ப் விலக்கிக் கொண்டிருக்கின்றார் அல்லது குறைத்திருக்கின்றார். அதனால் அவர் ஈரானை நிச்சயம் தாக்குவார் என்று வாதிடுவோரும் இருக்கின்றார்கள். இது பற்றி நமக்கு இப்படி யும் ஒரு கருத்தும் இருக்கின்றது. பெரும் கடன் தொல்லையில் அமெரிக்கா சிக்கிக் கொள்ள இந்த இராணுவ தளங்களைப் பராமறிக்கின்ற செலவும் அமைகின்றது. எனவே இந்த நெருக்கடியை வைத்;து ட்ரம்ப் இந்த தளங்களை விலக்கிக் கொண்டாரா என்றும் யோசிக்கலாம்.

உலகிலுள்ள முப்பது கோடி வரையான சியா முஸ்லிம்கள் ஈரானின் ஆட்சியை பாதுகாப்பதற்காக தன்னாலான அனைத்து தியாகங்களையும் செய்யத் தயாராக இருக்கின்றார்கள். இலட்சக் கணக்கானவர்கள் அரசை காக்க ஜிஹாதிகளாக உலகம்பூராவிலும் தயார் நிலையில் இருக்கின்றார்கள். இதற்கு அப்பால் உலகிலுள்ள பலநூறு கோடி முஸ்லிம்களும் ஏறக்குறைய அனைத்து முஸ்லிம்களும் போல இஸ்ரேலுக்கு எதிரான ஒரு மனநிலையில்தான் இருக்கின்றார்கள். அதனால் ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல் நடக்குமாக இருந்தால் அது அனைத்து நாடுகளிலும் தாக்கங்களையும் பின்விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று நாம் நம்புக்கின்றோம்.
ஈரானில் நடக்கின்ற அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் காசுக்காக வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கானவர்கள் இருந்தது கண்டறியப்பட்டிருக்கின்றது. அவர்களுக்கு அரசு மரணதண்டனை வழங்கப்படலாம் என்று சிஐஏ. யும் மொசட்டும் அச்சப்படுகின்றன. இதில் இர்பான் சுல்தான் என்ற தனது முக்கிய உளவாளியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
இதனை எல்லாம் மீறி ஈரானில் அமெரிக்காவுக்கு ஆதரவான ஒரு ஆட்சி மாற்றம் வருமாக இருந்தால் அதற்கும் ஒரு ஆப்புவைக்க ஈரான் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஏற்கெனவே தயாராகவே இருக்கின்றார்கள். அங்கு ஒரு இராணுவ ஆட்சியை நிறுவி ஒரு கடும் போக்கு ஆட்சிக்கும் அவர்கள் ஏற்பாடுகளுடன் இருப்பதாகவும் ஒரு தகவல். ஈரான் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா சையத் அலி காமெய்னி கொலை செய்யப்படலாம் என்று ஒரு பேச்சு பரவலாக இருக்கின்றது. அப்படி நடந்தால் அதற்கு அதிரடியான பதிலும் ஈரான் வைத்திருக்கும்.
நான் உலகில் எட்டுப் போர்களை நிறுத்தி அமைதி காத்திருக்கின்றேன். ஆனால் எனக்கு இதுவரை நோபல் பரிசு தரவில்லை. நான் இதன் பின்னரும் எதற்காக சமாதானத்தை பாதுகாக்க உழைக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கேள்வி எழுப்பி இருக்கின்றார். இந்த வார்த்தைகள் பற்றி என்னவென்று சொல்வது.?
ஈரான் வீழ்ச்சியும்
இஸ்ரேல் எழுச்சியும்!

1979 றூகுல்லா அயத்துல்லா கொமெய்னி தலைமையில் நடைபெற்ற இஸ்லாமிப் புரட்சிக்கு இன்று 46 வருடங்கள். துவக்கம் முதல் இந்த இஸ்லாமிய அரசு மேற்கு நாடுகளுடன் குறிப்பாக அமெரிக்காவுடன் முட்டி மோதிக் கொண்டிருந்தது. இந்த அரசு பதவிக்கு வந்த நாள் முதல் அதனை வீழ்த்திவிட எத்தனையோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அது நடக்கவில்லை. எண்ணற்ற பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் ஈரான் இராணுவ ரீதியில் பிராந்தியத்தில் செல்வாக்குள்ள நாடாக வளர்ந்து கொண்டிருந்தது.
இது அமெரிக்க இஸ்ரேல் மற்றுமல்லாது பிராந்தியத்திலுள்ள அரபு நாடுகளுக்கும் பெரும் சவலாக இருந்தது. எனவே ஈரானுக்கு எதிரான அமெரிக்க இஸ்ரேல் மட்டுமல்ல முஸ்லிம் நாடுகளும் பகிரங்கமாகவும் திரை மறைவிலும் சதிவேலைகளைச் செய்து கொண்டிருந்தன. இப்போது ஈரான் வீழ்ந்தால் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டி நாம் இங்கு தலைப்பிட்டு சொல்லி வைக்கின்றோம்.
01.ஈரானின் தற்போதய அரசு வீழ்கின்ற அதே வேகத்தில் சர்வதேச அரசியல் சமநிலையும் மாறும். 02. இஸ்ரேல் என்ற நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் அது அடைந்த மிகப் பெரிய வரலாற்று வெற்றியாக இது அமையும். 03.உலக அரங்கில் ரஸ்யா-சீனா அரசியல் தலைமைத்துவத்துக்கு இது மாபெரும் சரிவையும் அவமானத்தையும் தலைகுனிவையும் கொடுக்கும். 04.இஸ்ரேல் ஒத்துழைப்புடன் அமெரிக்கா மீண்டும் உலகில் நம்பர் வன் என்ற அந்தஸ்தை பெற்றுவிடும். இது குறைந்தது அரை நூற்றாண்டுகள் வரை தொடரலாம். 05.உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளும் அடிமை வாழ்வை ஆரம்பிக்கும்.
06.அனைத்து முஸ்லிம் நாடுகளும் போல அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்து விடும். இதனால் அமெரிக்க அதிகமான பெருளாதார நலன்களை பெற்றுக் கொள்ளும். 07.ஈரான் இராணுவ வல்லாதிக்கம் அமெரிக்க இஸ்ரேல் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிடும். 08.ஈரானில் தற்போது பதவியில் இருக்கின்ற ஆட்சியாளர்களும் அவர்களுக்கு துணையாக இருந்தவர்களும் போர் குற்றவாளிகள் போல தண்டிக்கப்படுவார்கள். 09.உலகிலுள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளும் இஸ்ரேலின்; நட்பு நாடுகளாக மாறிவிடும்.
10.ஈரான் ஆதரவு ஆயுதக்குழுக்கள் அழிக்கப்படும் அல்லது அவர்கள் சரணடைய வேண்டி வரும். 11.சவுதி அரேபியாவை அனைத்து இஸ்லாமிய நாடுகளின் தலைமை நாடாக அமெரிக்காவும் இஸ்ரேலும் வளர்த் தெடுக்கும். அதற்கு சவுதி அவர்களுக்குக் கைமாறு செய்யும். 12.அல் ஜசீரா தொலைக்காட்சி சேவை மூடப்படும். 13.அடிமை வாழ்வுக்கு எதிரான உலகம் பூராவிலும் இஸ்லாமிய கடும்போக்கு குழுக்கள் தோன்றி வன்முறை உச்சம் தொடும். 14.சீயாக்கள் பலிவாங்கப்படுவார்கள். 15.சியோனிச செல்வாக்கு உலகம் பூராவும் கொடி கட்டிப்பறக்கும்.
16.அமெரிக்கா-இஸ்ரேல் கைப் பொம்மை அரசு ஈரானில் பதவியேற்கும். 17.தற்போதய ஆட்சியாளர்கள் அனேகமாக ரஸ்யாவுக்குத் தப்பியோடுவார்கள். 18.ஈரானில் மன்னராட்சி – ரீசா பஹ்லவி வாரிசு பதவியேற்பார். 19.பலஸ்தீன சுதந்திரப்; போராட்டங்கள் ஓய்ந்து விடும். 20.ஐ.நா.காட்சிப் பொருளாக மாறும். மேற்சொன்ன இருபது தலைப்புக்களும் விரிவாகப் பேசக்கூடிய விவகாரங்கள். தேவைப்படுமாக இருந்தால் வரும் காலங்களில் இவற்றை விரிவாகப் பார்ப்போம்.





