ஈரான் பெண்களுக்கு ஆதரவாக கூந்தலை வெட்டி எதிர்ப்பு தெரிவித்த சுவீடன் பெண் எம்.பி.

Swedish lawmaker Abir Al-Sahlani cuts her hair as she delivers a speech during EU debate on Iran protests at the European Parliament in Strasbourg, France October 4, 2022 European Union/Handout via REUTERS
ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாத இளம் பெண் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதை கண்டித்து ஐரோப்பிய பாரளுமன்ற கூட்டத்தில் சுவீடன் பெண் எம்.பி. தனது கூந்தலை வெட்டி எதிர்ப்பை பதிவு செய்தார்.

EU lawmaker, who cut off her hair in support of Iranian womenஈரான் பெண்கள் , கூந்தல், சுவீடன் பெண் எம்பி

ஈரான் நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் கடுமையான தண்டனை உண்டு. இந்நிலையில் குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த 13ம் தேதி தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார்.

அப்போது தலைப்பகுதியை ஹிஜாப்பால் முழுமையாக மறைக்கவில்லை என கூறி அவரை போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்து இறந்தார். உயிரிழந்த மாஷா அமினிக்கு ஆதரவாக போலீசாரை கண்டித்து அந்நாட்டு பெண்கள் தங்களது ஹிஜாப்பை கழற்றி தீயிட்டு கொளுத்தினர். தங்களது கூந்தலையும் வெட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அபீர் அல் ஷலானி என்ற சுவீடன் பெண் எம்.பி. ஈரானில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை கண்டித்து பேசினார்.

அப்போது, திடீரென தனது கூந்தலை வெட்டி எதிர்ப்பை பதிவு செய்தார். ஈரான் பெண்கள் நடத்தும் போராட்டத்திற்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன் என்றார். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Previous Story

உலகின் முதல் பறக்கும் தட்டு

Next Story

ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கை: புதிய தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு