ஈரானுக்கு பார்சல் அனுப்பப்பட்ட அணு ஆயுத ஏவுகணைகள்!

மிரண்டு நிற்கும் அமெரிக்கா அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரானுடனான பதட்டங்களுக்கு இடையில் பாகிஸ்தான் ராணுவம் புதிய முடிவு ஒன்றை எடுக்க உள்ளதாம். சர்வதேச அரசியலையே மாற்றும் வகையில் பகீர் முடிவு ஒன்றை எடுக்கும் திட்டத்தில் பாகிஸ்தான் உள்ளதாம்.

அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரானுடனான இடையிலான மோதல் காரணமாக உலகப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு மத்தியில் ஷஹீன் II எனப்படும் தொலைதூர பாலிஸ்டிக் அணு ஆயுத ஏவுகணைகளை ஈரானுக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதல் தாக்குதல் நடத்த போகும் சர்ப்ரைஸ் கை இதன் மூலம் அணு ஆயுதங்களை ஈரான் உருவாக்கும் பட்சத்தில்.. அதை பாகிஸ்தானின் இந்த ஏவுகணையை பயன்படுத்தி இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளை தாக்க முடியும். செங்கடலில் இருக்கும் அமெரிக்காவின் போர் கப்பல்களையும் கூட இதன் மூலம் ஈரான் தாக்க முடியும்.

போர் மூளும் அபாயம்

ஏற்கனவே அமெரிக்கா படைத்தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ள நிலையில், அமெரிக்கா இதற்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோதல் அப்படியே நீண்டு.. அது உலகப்போராக முடியும் அபாயம் உள்ளது.

இஸ்ரேல் – பாலஸ்தீன போரில் அமெரிக்கா மூக்கை நுழைத்து வரும் நிலையில், அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈராக்கில் இருக்கும் அமெரிக்காவின் ராணுவ மையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.

ஈராக்கில் உள்ள இராணுவத் தளத்திற்கு எதிரான தாக்குதலில் குறைந்தது ஐந்து அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதையடுத்து நேற்று அவசரமாக அதிபர் பிடன் வெள்ளை மாளிகையில் கமலா ஹாரிஸ் உடன் ஆலோசனை செய்தார்.

யுஎஸ்எஸ் லாபூன் மற்றும் யுஎஸ்எஸ் கோல் ஆகிய இரண்டு அமெரிக்க நாசகாரக் கப்பல்கள் தற்போது செங்கக்கடலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஓமன் வளைகுடாவிலிருந்து செங்கடலுக்கு இஸ்ரேலின் திசையில் இந்த கப்பல்கள் நகர்த்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் இன்று காலை வரை ஓமன் வளைகுடாவில் தங்கியுள்ளது. விரைவில் இதுவும் செங்கக்கடலுக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரானுக்கு ஏவுகணைகளை அனுப்ப பாகிஸ்தான் முன்வந்ததாக வெளியான செய்திக்கு அமெரிக்கா தற்போது பதிலடி கொடுத்துள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறுகையில், “இஸ்ரேலுக்கான எங்கள் ஆதரவில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம், மேலும் அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டியதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.

” இதற்கிடையில், வார இறுதியில் இருந்து ஈரான் ஏவுகணைகளை நகர்த்துவதை தாங்கள் அவதானித்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரானுடனான இடையிலான மோதல் காரணமாக உலகப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இதற்கு மத்தியில் ஷஹீன் II எனப்படும் தொலைதூர தூர பாலிஸ்டிக் அணு ஆயுத ஏவுகணைகளை ஈரானுக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இஸ்ரேல் தங்களைத் தற்காத்துக் கொள்ள எல்லா உரிமையும் உள்ளது.. அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். ஈரானுக்கு ஏவுகணைகளை அனுப்படுவது தவறான முடிவு.. இதை எந்த நாடு செய்தாலும் நிலைமையை மோசமாக்கவே செய்யும், என்று கூறி உள்ளார்.

Previous Story

இலங்கை வெற்றிக்கு உதவிய இந்திய வீரர் !

Next Story

Olympic Games Paris 2024