ஈரானுக்கு அடுத்தடுத்து பெருகும் ஆதரவு!

 நட்பு நாடுகளின் நெருக்கடியால் திணறும் அமெரிக்கா!

ஈரான் வைத்திருக்கும் அணு சக்தியை, ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடாது என்பதில் அமெரிக்கா குறியாக இருக்கிறது. இந்நிலையில், தான் உருவாக்கியிருக்கும் அணு சக்தி ஒப்பந்தத்தில், ஈரானை கையெழுத்து போட வைக்க அமெரிக்கா மிரட்டி வருகிறது.

இப்படி இருக்கையில், அமெரிக்காவுக்கு எதிராக அதன் நட்பு நாடுகள் திரும்பியிருப்பது, டிரம்ப்பை டென்ஷன் ஆக்கியிருக்கிறது. அணுகுண்டால் மட்டும் அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்த, யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்கப்பலை, அமெரிக்கா ஈரான் நோக்கி அனுப்பியுள்ளது.

இந்த கப்பலுடன் மேலும் சில போர் கப்பல்கள் பயணித்திருக்கின்றன. இந்த நெருக்கடியால், ஈரானை எப்படியாவது பணிய வைத்துவிட வேண்டும் என்று அமெரிக்கா யோசித்து வருகிறது. அமெரிக்கா, ஈரானை தாக்குகிறது எனில், வெறுமென போர்க்கப்பலை மட்டும் பயன்படுத்தாது.

அது, அரபு நாடுகளில் உள்ள தனது ராணுவ தளத்தையும் பயன்படுத்தும். எப்படி இருந்தாலும், ஈரானை ஒட்டியுள்ள நாடுகளை தாண்டி போய்தான் ஈரானை தாக்க முடியும். சிக்கல் என்ன? இங்குதான் சிக்கல் இருக்கிறது. புவியியல் ரீதியில் ஈரான் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஏமன், சவுதி அரேபியா, குவைத், ஈராக், அஜர்பைஜான் ஆகிய நாடுகளுக்கு பக்கத்தில் உள்ளது.

குறிப்பாக ஈரான் தலைநகரான தெஹ்ரான், அஜர்பைஜானுக்கு பக்கத்தில் இருக்கிறது. ஒருவேளை அமெரிக்காவின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்த வேண்டும் எனில், அஜர்பைஜானை தாண்டி வர வேண்டும்.

இப்படி இருக்கையில், ஈரானை தாக்க எங்கள் வான் வெளியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அந்நாடு கூறியிருக்கிறது. அஜர்பைஜான் அறிவிப்பு அஜர்பைஜான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஹுன் பைரமோவ், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் நடத்திய தொலைபேசி உரையாடலில் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இத்தனைக்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் அஜர்பைஜான் நல்ல நட்பாகத்தான் இருக்கிறது. இருப்பினும், தாக்குதல் நோக்கத்திற்காக எங்கள் வான்வெளியை அனுமதிக்க மாட்டோம் என்று அஜர்பைஜான் சொல்லியிருப்பது, அமெரிக்காவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு முன்னர், யுஏஇ வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், “ஈரானுக்கு எதிரான எந்தவொரு விரோதமான ராணுவ நடவடிக்கைக்கும் எங்கள் வான்பரப்பு, நிலப்பரப்பு அல்லது கடல் பகுதியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்” என்று தெரிவித்திருந்தது.

மேலும், அத்தகைய தாக்குதல்களுக்கு எந்தவொரு தளவாட ஆதரவையும் வழங்க மாட்டோம் என்றும் தெளிவாக கூறியிருந்தது. அடுத்தடுத்து அறிவித்த நாடுகள் அதேபோல சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஈரானிய அதிபருடன் நடத்திய பேச்சுவார்த்தையில், “எந்தத் திசையில் இருந்து தாக்குதல் வந்தாலும், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு சவுதி அரேபியாவின் வான்பரப்பைப் பயன்படுத்த எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம்” என்று உறுதியளித்துள்ளார்.

அரபு நாடுகளின் நிலைப்பாடு கத்தார் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளும், அமெரிக்காவிடம் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. தங்கள் நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களில் இருந்து ஈரானைத் தாக்கக் கூடாது என்று அவை வலியுறுத்தியுள்ளன. இந்த நாடுகள் இணைந்து அமெரிக்காவிடம், ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அது ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பைப் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளன.

காரணம் இதுதான் இந்த நாடுகள் எல்லாம் அமெரிக்காவின் நட்பு நாடுகள்தான். இவை ஈரானுக்கும் எதிரிகள்தான். இருப்பினும், ஈரான் வசம் மிகவும் பயங்கரமான ஆயுதங்கள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தி பக்கத்து நாடுகளை ஈரான் தாக்கினால், ஹர்முஸ் ஜலசந்தி வழியாக நடக்கும் சர்வதேச எண்ணெய் வர்த்தகம் பாதிக்கும். இது அரபு நாடுகளின் வருவாயில் கை வைப்பதற்கு சமம். எனவேதான் வேறு வழியின்றி ஈரானுக்கு சப்போர்ட் செய்திருக்கின்றன.

Previous Story

Iran Issues Direct Threat as US Deploys Aircraft Carrier in Gulf |

Next Story

போர் ஒத்திகையை தொடங்கிய ஈரானிய கப்பற்படை