இஸ்லாமிய திருமண விதிகளை, மாற்றுவதில் நாம் கவனம் செலுத்தவில்லை – விஜித ஹேரத்

அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் ஹஜ் யாத்திரையை ஏற்பாடு செய்யும் முகவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் இன்று (04) திங்கட்கிழமை இடம்பெற்றது.

இதில் கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத்

தேர்தல் காலத்தில் முஸ்லிம் சமூகத்தில் பரப்பப்படும் அவதூறுகள் குறித்தும் கருத்து தெரிவித்த அவர், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் அனைத்து மத நம்பிக்கைகளும் அனுமதிக்கப்படுவதாகவும், இதில் எந்த தடையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ இஸ்லாமிய திருமண விதிகளை மாற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை எனவும், சமூக வலைத்தளங்கள் ஊடாக உலாவரும் ஒவ்வொரு அமைப்பின் கருத்தும் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கருத்து அல்ல எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

Previous Story

அமெரிக்காவில் திக்...திக்... தேர்தல்; சஸ்பென்ஸ் இன்று முடிவுக்கு வரும்!

Default thumbnail
Next Story

USA தேர்தலில் டிரம்ப் வெற்றி!