இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தத்தம்:  இதை யாரும் எதிர்பார்க்கல! இறுதியில் என்ன நடக்கும்?

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் இப்போது சில நாட்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த அக். 7ஆம் தேதி முதல் போர் தொடர்ந்து நடந்து வருகிறது. அப்போது முதலில் இஸ்ரேல் நாட்டில் இறங்கிய ஹமாஸ் தீவிரமாகத் தாக்குதலை நடத்தியது.

அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும் தாக்குதலை ஆரம்பித்தது. அதிலும் காசா பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் அங்குள்ள ஹமாஸ் இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தினர். மேலும், ஹமாஸின் சுரங்கங்கள் மீதும் இஸ்ரேல் தாக்கினர். இந்தச் சூழலில் தான் சர்வதேச நாடுகள் போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தினர்.

Tearful Reunions As Hamas Frees 2nd Batch Of Hostages Held Captive In Gaza

போர் நிறுத்தம்:

முதலில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் பெரியளவில் பிடிகொடுக்கவில்லை. இருப்பினும், சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் அழுத்தம் அதிகரித்த நிலையில், போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டது. நான்கு நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், அது கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

போர் நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையில், இதுவரை இரண்டு பேட்ஜ் பிணையக் கைதிகளை ஹமாஸ் ரீலீஸ் செய்துள்ளது. தற்போது இரு தரப்பிற்கும் இடையே 4 நாட்கள் போர் நிறுத்தம் இருக்கும் நிலையில், அது மேலும் சில நாட்கள் நீட்டிக்க வாய்ப்புள்ளதாகப் பேச்சுவார்த்தையை மத்தியஸ்தனாம் செய்யும் எகிப்து தெரிவித்துள்ளது.

போர் நிறுத்ததிற்கு உண்மையில் என்ன காரணம் கத்தார்: இது தொடர்பாக கத்தார் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “ஹமாஸ் ஒரு பக்கம் பிணையக் கைதிகளை பேட்ஜ் பேட்ஜாக விடுவித்து வருகிறார்கள். மறுபுறம் இஸ்ரேல் சிறையில் இருக்கும் பாலஸ்தீனிய கைதிகளும் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள்” என்றார். காசாவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகச் சண்டை தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த போர் நிறுத்தம் காசா மக்களுக்கு நிம்மதியைத் தருவதாக அமைந்துள்ளது.

அங்குள்ள மக்களுக்குத் தேவையான உதவி பொருட்கள் உள்ளே வரவும் இந்த போர் நிறுத்தம் பெரியளவில் உதவும். உதவி பொருட்கள்: காசா பகுதிக்குள் முக்கிய உதவிகள் அனைத்தும் ரஃபா எல்லை வழியாகவே உள்ளே வருகிறது. அந்த எல்லை எகிப்து கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், வெள்ளிக்கிழமை வரிசையாகப் பல வாகனங்கள் உதவி பொருட்களுடன் காசாவுக்குள் நுழைந்துள்ளன.

இதற்கிடையே இரு தரப்பில் இருந்தும் பாசிட்டிவ் சிக்னல்கள் வந்துள்ளதாகக் கூறும் கத்தார், இந்த போர் நிறுத்தம் மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது. இது தொடர்பாக எகிப்தின் தியா ரஷ்வான் கூறுகையில், “பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. ஹமாஸ் வசம் இருக்கும் கூடுதல் பிணையக் கைதிகளை விடுவிப்பது, இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பது என அனைத்து தரப்பினருடனும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது” என்றார்.

தற்போதுள்ள ஒப்பந்தத்தின் கீழ், மொத்தம் 50 பிணையக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும். முதலில் சிறுவர்கள், பெண்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதேநேரம் நேரம் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. அதற்குப் பதிலாக 150 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க இருக்கிறது. அவர்களில் சிலர் கடுமையான பிரிவுகளில் தண்டனை பெற்றவர்கள் ஆவர்.

அமெரிக்கா கருத்து: இது வெறும் தற்காலிக போர் நிறுத்தம்தான் என்றும் மீண்டும் சண்டை நிச்சயம் தொடரும் என்று இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டிருந்தது. அதேநேரம் தற்போதுள்ள நிலைமையை வைத்துப் பார்க்கும் போது போர் நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்பட்ட வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். இருப்பினும், இதில் இறுதியில் என்ன நடக்கும் என்பதை நாம் பொறுத்தே பார்க்க வேண்டும்.

Previous Story

இம்ரான் கானுக்கு வந்த புதிய சிக்கல்:திருமண மோசடி?

Next Story

பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம்