இஸ்ரேல் போட்ட குண்டால் 15 பேர் உடல் சிதறி பலி.. 

காசா நகரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் வான்வெளி தாக்குதலின்போது ஆம்புலன்ஸ் மீது விழுந்த குண்டால் 15 பேர் உடல் சிதறி பலியானதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளன. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே தொடர்ந்த மோதல் ஏற்பட்டு வந்தது.

ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாதிகள் என அறிவித்துள்ளன. கடந்த மாதம் 7ம் தேதி கடும் மோதல் உருவானது. ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது மிக கடுமையான தாக்குதலை நடத்தினர். 20 நிமிடங்களில் 7 ஆயிரம் ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். அதோடு இஸ்ரேலுக்கு நுழைந்து அவர்கள் கடும் தாக்குதலை நடத்தினர்.

பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டனர். ஹமாஸ் தீவிரவாதி அமைப்பு இல்லை! இஸ்ரேலுக்கு எதிராக இறங்கிய துருக்கி! இஸ்லாமிய நாடுகளுக்கு அழைப்பு இதனால் அன்றைய தினம் மட்டும் 1,400 பேர் பலியாகினர். மேலும் 230 பேர் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இஸ்ரேலின் கடந்த 75 ஆண்டு கால வரலாற்றில் இது மோசமான தாக்குதலாக பார்க்கப்படுகிறது. இதனால் இஸ்ரேலும் பதிலடி கொடுக்க தொடங்கியது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் தொடங்கியதாக கூறி காசா மீது உக்கிரமான வான்வெளி தாக்குதலை தொடங்கினார். இந்த தாக்குதல் 4வது வாரமாக தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே தான் இஸ்ரேல் தரைவழி தாக்குதலையும் தொடங்கி உள்ளது. காசா நகருக்குள் படிப்படியாக இஸ்ரேல் படைகள் நுழைந்து தாக்குதலை தொடங்கி உள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவின் அன்டனி பிளிங்கன் டெல்ல அவிவ் நகரில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை 3வது முறையாக சந்தித்தார். இந்த வேளையில் காசாவில் இருந்து மக்கள் வெளியேறுவதற்காக போரை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்க நெதன்யாகு மறுத்துவிட்டார்.

இஸ்ரேலில் இருந்து பிணைக்கைதியாக பிடித்து செல்லப்பட்டவர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் முற்றிலுமாக விடுவிக்க வேண்டும். அப்போது தான் போர் நிறுத்தம் செய்யப்படும் என நெதன்யாகு கூறிவிட்டார். 3வது உலகப்போரா? இஸ்ரேல்-ஹமாஸ் படை பலம் என்ன? பிளஸ்-மைனஸ் இதுதான்! ஆதரவு நாடுகள் எவை? இந்நிலையில் தான் காசாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளாது. அதாவது காசா நகரில் இஸ்ரேல் இரவு, பகலாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் வடக்கு காசா பகுதியில் இருந்து பொதுமக்களை ஆம்புலன்ஸில் வெளியேற்றினோம். அப்போது ஆம்புலன்ஸ் மீது வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 15 பேர் பலியாகினர். மேலும் 60 பேர் படுகாயமடைந்தனர் என தெரிவித்துள்ளது. இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது. பொதுவாக போரின்போது மக்கள் வசிக்கும் பகுதி, பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றின் மீது தாக்குதல் நடத்தக்கூடாது.

ஆனால் தொடக்கம் முதலே இஸ்ரேல் போர் வழிமுறைகளை மீறி தாக்கி வருவதாக பாலஸ்தீனம் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஆனால் இதனை இஸ்ரேல் மறுத்து வருகிறது. மேலும் தற்போதைய சூழலில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மொத்தம் 9,227 பலாஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 3,826 சிறுவர்கள் அடங்குவர் என பாலஸ்தீனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Story

பாலத்தீனத்தை ஆதரிக்கும் சீனாவால் அமெரிக்க ஆதரவு பெற்ற இஸ்ரேலை சமாளிக்க முடியுமா?

Next Story

டிரைவர் மட்டுமல்ல.. டிரைவர் சீட்டே இல்லாமல் ஜப்பானில் ஓடப்போகும் கால் டாக்சி!