இஸ்ரேல்: சொந்த காசில் சூனியம்.!

“சவூதி அரேபியாவின் முன்னாள் உளவுத்துறைத் தலைவர் இளவரசர் துர்கி அல்-ஃபைசல்”

ஹமாஸுக்கு நிதி தந்து.. வளர்த்துவிட்டதே இஸ்ரேல் நெதன்யாகுதானாம்! ஷாக் பின்னணி பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் 26வது நாளாக இன்னும் கடும் தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், இத்தனை ஆண்டுகளாக ஹமாஸ் படையினர் வளர்ச்சியடைய இஸ்ரேல்தான் நிதியுதவி அளித்தது என்கிற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் போர் கதை கொஞ்சம் பெரியது. இதன் தொடக்கம் இரண்டாம் உலகப்போர். போரில் ஜெர்மனியிடமிருந்து யூதர்களை சோவியத் ரஷ்யா காப்பாற்றியது. தப்பி பிழைத்த யூதர்கள் செங்கடல் வழியாக மத்திய கிழக்கு பகுதிக்கு வந்து சேர்ந்தனர். அங்கு அவர்கள் பாலஸ்தீனத்தில் அகதிகளாக குடியேறினர்.

ஆனால் மெல்ல மெல்ல பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து, இஸ்ரேல் எனும் ஒரு நாட்டை தங்களுக்காக உருவாக்கிக் கொண்டனர். இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உடந்தை.  1940களில் தொடங்கி 1980கள் வரை பாலஸ்தீன மக்கள் இதனை எதிர்த்து அரசியல் ரீதியான போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால் அதன் பின்னர், “அரசியல் போராட்டம் மட்டும் வேலைக்காகாது. அத்துடன் ஆயுத போராட்டமும் வேண்டும்” என பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் உருவானது.

ஹமாஸ் இஸ்ரேல் மீது அவ்வப்போது சிறு தாக்குதலை நடத்துவதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல், ஒட்டு மொத்த பாலஸ்தீனம் மீது கடும் தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து வந்தது. இதனையடுத்து கொஞ்ச காலம் அமைதி நிலவிய நிலையில், தற்போது இந்த மோதல்கள் மீண்டும் மேலெழுந்துள்ளன. கடந்த 7ம் தேதி ஒரே நேரத்தில் 5000க்கும் அதிகமான ராக்கெட்களை ஹமாஸ் இஸ்ரேல் மீது ஏவியதுதான் தற்போதைய போருக்கான தொடக்கப்புள்ளி.

Benjamin Netanyahu and Gaza | Cartoon Movement

ஆனால் முழுக்க முழுக்க இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் சுமார் 25 மைல் நீளமும், 6 மைல் அகலமும் கொண்ட காசா எனும் துண்டு நிலத்தில் இருக்கும் ஹமாஸ் படையால் எப்படி இவ்வளவு ராக்கெட்களை உருவாக்க முடிந்தது? இதற்கான பொருட்கள் எங்கிருந்து கிடைத்தன? யார் ஹமாஸுக்கு நிதி அளித்தது? என்கிற கேள்விகள் எழுந்திருந்தன.

இதற்கான பதில்கள் தற்போது கிடைக்கப்பெற்றிருக்கிறது. அதாவது ஹமாஸ் வளர்ச்சிக்கு இஸ்ரேல்தான் நிதியுதவி அளித்திருக்கிறது. இதனை சவூதி அரேபியாவின் முன்னாள் உளவுத்துறைத் தலைவர் இளவரசர் துர்கி அல்-ஃபைசல் தற்போது பொதுவில் போட்டு உடைத்திருக்கிறார். இஸ்ரேலுக்கு சுதந்திர பாலஸ்தீனம் அமைவதில் எந்த விருப்பமும் கிடையாது. எனவே தற்போது இரண்டு துண்டுகளாக இருக்கும் காசா மற்றும் மேற்கு கரை பகுதிகளை அப்படியே நிலைத்து வைத்திருக்க இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு திட்டம் தீட்டினார்.

இங்குதான் கத்தார் உள்ளே நுழைகிறது. ஆஹா கத்தார் அடிப்படையில் ஒரு இஸ்லாமிய அரபு நாடு. அது தனது சக இஸ்லாமிய நாடான பாலஸ்தீனம் வீழ்வதையும், அந்நாட்டு மக்கள் துன்பத்தில் கிடப்பதையும் விரும்பவில்லை. இதனை பயன்படுத்திக்கொண்டு கத்தாரிடமிருந்து இஸ்ரேல் பணத்தை பெற்று காசாவுக்கும் மேற்கு கரைக்கு பிரித்து வழங்கியது. ஆனால் இஸ்ரேலுக்கு இதில் என்ன லாபம்? என கேள்வி எழலாம்.

லாபம்!

லாபம் இருக்கிறது. காசா மக்கள் ஏற்கெனவே இஸ்ரேல் மீது கடுப்பில் இருக்கிறார்கள். இது இப்படியே போனால் பெரும் புரட்சியாகவும் வெடிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே மக்களின் மனங்களை திசை திருப்பவும், அவர்களை விடுதலை உணர்விலிருந்து மழுங்கடிக்கவும் இந்த நிதியை இஸ்ரேல் பயன்படுத்தியது. அடிப்படை தேவைகள், வீடுகள் இவையெல்லாம் இருந்தால் மக்கள் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்துவிடுவார்கள் என நெதன்யாகு கணக்கு போட்டார்.

அதன்படி பணம் டிஜிட்டல் முறையில் இஸ்ரேலுக்கு கத்தார் அனுப்பும். அப்பணத்தை நோட்டுகளாக இஸ்ரேலும், அமெரிக்காவும் காசா எல்லைக்குள் அனுப்பும். சமீப ஆண்டுகளாக இது எல்லாம் சரியாதான் நடந்துக்கொண்டிருந்தன. அதேபோல இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாதிகள் எந்த தாக்குதலையும் திட்டமிடவில்லையென மிகவும் சக்தி வாய்ந்த உளவு அமைப்பான மொசாட் சொந்த நாட்டுக்கு அறிக்கை கொடுத்தது.

அப்புறம் என்ன? தான் சென்றுக் கொண்டிருக்கும் வழி சரியானதுதான் என நெதன்யாகு முழுமையாக நம்பினார். நெதன்யாகுவின் கீழ் இஸ்ரேல் பல ஆண்டுகளாக செய்ய முயற்சிக்கும் சிறந்த சமநிலை இதுதான். சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்கும் சிந்தனையை காசா, மேற்கு கரை மக்கள் மத்தியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடிப்பது. இந்த திட்டத்தை மேலும் சிறப்பாக்க நெதன்யாகு மற்றொரு முயற்சியை எடுத்தார்.

அதாவது காசாவிலிருப்போர் இஸ்ரேலில் தினமும் வேலைக்கு சென்றுவர அனுமதிக்கப்பட்டது. 2021ம் ஆண்டு 3,000 பேருக்கு இப்படி அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இது 2023ம் ஆண்டில் 20,000ஆக அதிகரித்தது. குடிநீர், எரிபொருள், மின்சாரம், உணவு என அனைத்தும் காசாவுக்கு இஸ்ரேல் வழியாகவும், எகிப்து வழியாகவும் நுழைந்தது.

மக்களுக்கு தேவையான அனைத்தும் ஏறத்தாழ கிடைத்துவிட்டது. அப்புறம் என்ன? மக்கள் தங்கள் வாழ்க்கையை நோக்கி ஓட வேண்டியதுதான் என நெதன்யாகு மன கணக்கு போட்டு வைத்திருந்தார். ஆனால் ஹமாஸ், இஸ்ரேலின் கண்ணில் மண்ணை தூவி தனது வேலையை தொடங்கியது. கடந்த 2017ம் ஆண்டு ஹமாஸ் தலைவர் காலித் மெஷால் தங்களது கொள்கை ஆவணத்தை வெளியிட்டார். அதில், “நாங்கள் இஸ்ரேலுக்கு எதிரானவர்கள் கிடையாது. சியோனிச கருத்துகள் கொண்ட ஆக்கிரமிப்புக்கு எதிரானவர்கள்” என்று கூறியிருந்தார்.

இது நெதன்யாகுவுக்கு ஒரு பாசிட்டிவ் சிக்னல். எனவே ஹமாஸை இஸ்ரேல் சரியாக கண்டுக் கொள்ளவில்லை. இந்த கேப்பில் ஹமாஸ் சுரங்கங்களை அமைத்து அதில் இயங்க தொடங்கியது. அதேபோல தங்களுக்கான நிதியை பெற கிரிப்டோ கரன்சி வழிமுறையை பின்பற்றியது. இதன் மூலம் ஈரான் உள்ளிட்ட நாடுகளிடமிருந்தும் அது நிதியை பெற்றது.

இப்படியாக இந்த நிதியை கொண்டு சொந்தமாக ராக்கெட்களை தயாரித்து கடந்த 7ம் தேதி மோதலில் இறங்கியது. ஏற்கெனவே நெதன்யாகு மீது இஸ்ரேல் மக்கள் ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், தற்போது காசாவுக்கு நிதி வழங்கிய விஷயத்திலும் அவர் கோட்டைவிட்டுவிட்டார் என மக்கள் கொதித்தெழுந்திருக்கின்றனர்.

Previous Story

இஸ்ரேலுக்கு திரும்பி பக்கம் எல்லாம் அடி.!

Next Story

பாலத்தீனத்தை ஆதரிக்கும் சீனாவால் அமெரிக்க ஆதரவு பெற்ற இஸ்ரேலை சமாளிக்க முடியுமா?