இஸ்ரேலுக்கு தான் சேதாரம்! எங்ககிட்ட இருக்கு ஆதாரம்! நாங்க தான் வல்லரசு.

ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு பதில் அடி கொடுத்துள்ளது இஸ்ரேல் ராணுவம். இந்த நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் தங்களுக்கு பாதிப்பு இல்லை எனவும், தங்கள் தாக்குதலால் தான் இஸ்ரேலுக்கு பாதிப்பு ஏற்பட்டது என வீடியோக்களை வெளியிட்டுள்ளது ஈரான் ராணுவம்.

மேலும் பழைய வீடியோக்களை வைத்து ஈரானுக்கு எதிராக சில ஊடகங்கள் தவறான செய்தி பரப்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் காசாவில் இருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது.

காசாவில் அப்பாவி மக்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. “இஸ்ரேல் தாக்குலில் 2 பேர் பலி.. ஈரான் ராணுவம் அறிவிப்பு! “

இதற்கு இடையே ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹைத்தி, சிரியாவின் ஷியா போராளிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது நடத்திய தாக்குதலில் பல உயிரிழந்தனர்.

குறிப்பாக ஹிஸ்புல்லா இயக்கத்தின் முக்கிய தலைவர்களும் தளபதிகளும் ட்ரோன் தாக்குதலில் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இதனால் வெகுனெடெழுந்த ஈரான் கடந்த ஒன்றாம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. சுமார் 150-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது.

“மூளையோ மூளை.. ஈரானை தாக்க 25 நாட்கள் காத்திருந்த இஸ்ரேல்.. ஏன் தெரியுமா? இப்படியொரு காரணமா! ” ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் விழுந்ததால் இஸ்ரேல் திணறி போனது என்னவோ உண்மைதான். அதே நேரத்தில் அதன் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் ஈரானின் தாக்குதல் ஏவுகணைகளை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் கூறியிருந்தது.

இந்த நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என கூறப்பட்ட நிலையில சொன்னது போலவே ஈரான் மீது இஸ்ரேல் இன்று வான்வழி தாக்குதல் நடத்தியது. ஈரான் தலைநகர் டெக்ரான் மற்றும் கராஜ் நகரங்களை குறிவைத்து ஏவுகணைகள் ஒரே நேரத்தில் சீறிப் பாய்ந்தன.

இந்த நிலையில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மையங்களை குறி வைத்து மட்டுமே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதே நேரத்தில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலால் தங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் இஸ்ரேலின் ஏவுகணைகளை நடுவானிலேயே இடைமறித்து அழித்து விட்டதாகவும், ஏவுகனை தாக்குதலில் மட்டுமல்ல, வான் பாதுகாப்பிலும் தாங்கள் தான் வல்லரசு என ஈரான் கூறி இருக்கிறது.

“இஸ்ரேல் குண்டுமழையில் ஈரான் இழந்தது என்ன? எல்லை தாண்டி தாக்கிய போர் விமானங்கள்.. என்ன நடந்தது? ” மேலும் கடந்த ஒன்றாம் தேதி தங்கள் நாட்டு ஏவுகணைகள் இஸ்ரேலை பதம் பார்த்த வீடியோக்களை பகிர்ந்து, இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் தங்களுக்கு பாதிப்பு இல்லை எனவும், தங்கள் தாக்குதலால் தான் இஸ்ரேலுக்கு பாதிப்பு ஏற்பட்டது என வீடியோ பதிவிட்டு இருக்கிறது.

மேலும் சில சர்வதேச ஊடகங்கள் சில தெஹ்ரான் சுத்திகரிப்பு மையத்தின் வீடியோக்களை வெளியிட்டு இருக்கின்றன. ஆனால் அது மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட தீ விபத்தின் போது எடுக்கப்பட்டதாகவும், சில இடங்களில் குண்டு வெடிக்கும் வீடியோக்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் வீடியோக்கள் என கூறியுள்ளது.

Previous Story

கம்மன்பிலவுக்கு உச்சகட்ட மனநோய்!

Next Story

பொதுத் தேர்தலில் தனிக்குதிரை ஓட்டம்!