இளைஞர் மன்றக் குழறுபடிகள்!

நஜீப்-

 நன்றி 10.08.2025 ஞாயிறு தினக்குரல்

தற்போது நாடுபூராவிலுமுள்ள 14000 கிராம சேவகர் பிரிவுகளுக்கு இளைஞர் மன்றங்களை அமைக்கின்ற பணிகள் தேர்தல் மூலம் நடந்து வருகின்றது. முன்பு இது முறையாக நடக்கவில்லை.

இளைஞர் மன்ற விதிகளின்படி இது நடந்து வருகின்றது. குறுக்குவழியில் இதுவரை பதவிகளில் இருந்தவர்கள் பிடி இந்த முறை கைநழுவிப்போகின்றது. இதனால் கடுப்பாகிய சில எதிரணியினர் அங்கு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

இதற்கு பதில் கொடுகின்ற துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நாட்டில் எமக்கு அறுபது சதவீதமான மக்கள் வாக்களித்திருக்கின்றனர். அது போலதான் இந்த தேர்தல் முடிவுகளும்.

இதுவரை குறுக்குவழியில் அங்கு பதவி வகித்தவர்கள் தோல்வி வேதனைகளால்தான் கதறுகின்றார்கள். நாம் ஏதாவது தப்புப் பண்ணி இருந்தால் அவர்கள் நீதிமன்றத்தை நாடலாம்.

அவர்களுக்கு அதற்கான உரிமை இருக்கின்றது என்றார் அமைச்சர்.

Previous Story

Baby AI video .අපහාසයට නොව..

Next Story

අනේ පලයං බං නාමල් යන්ඩ...!