(ஊடகவியலாளர் ஒருவரின் நாளாந்த நேரடிப் பகிர்வு)
”நான் அன்று வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது சுவிட்ஸர்லாந்து நாட்டு பொதுமகன் ஒருவரும் என்னுடன் பயணிக்கிறார்”
ஆரம்பத்தில் இருவருக்கும் இடையில் இயல்பான கலந்துரையாடல் பின்னர் ஒருவரையொருவர் தெரிந்துக்கொண்ட பின்னர், பேச்சு திசை திரும்புகிறது.
அவர், ஏதோ அலுவலக நிமித்தமாக இலங்கை வந்துள்ளார்.
அவர், இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இந்தியாவுக்கு சென்று வந்துள்ளார்.
இன்னும் இரண்டு நாட்களில் மீண்டும் தாயகம் திரும்பப்போவதாக தெரிவித்தார்.
சரி, நாங்கள் இருவரும் என்ன கதைத்தோம் என்று சொல்லத்தானே வேண்டும்.
இலங்கையின் பொருளாதார கஸ்டங்களை பற்றி அவர் வினவுகிறார்.
”நான் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இந்தியாவுக்கு சென்றிருந்தேன்”
“அங்குள்ள மக்களைக் காட்டிலும் இலங்கை மக்கள் பழகுவதற்கு இயல்பானவர்களாக இருக்கின்றனர்”
“ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை பொறுத்தவரை, இந்திய மக்களுடன் ஒப்பிடும்போது இலங்கை மக்கள் கஸ்டங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்”
அவர் தொடர்கிறார் ———————
“இந்தியாவிலும் இலங்கையை போன்று அதிகார துஸ்பிரயோகங்கள், மோசடிகள், ஊழல்கள் இருக்கின்றன”
“ஆனால் அந்த நாடு பொருளாதாரத்தி்ல் சிறப்பான வளர்ச்சியைப் பெற்று வருகிறது”
“உங்களுடைய நாட்டில் என்ன நடக்கிறது”? அவர் என்னிடம் வினவுகிறார்.
நான் பதில் கூறுவதற்கு முயற்சிக்கும் போதே அவர் கருத்து ஒன்றை கூறுகிறார் “
இங்கு ஆட்சி மக்களுக்கான ஆட்சி அல்ல. அவர்கள், அவர்களுக்காக ஆளுகின்ற ஆட்சியாகவே எனக்கு தெரிகிறது”என்பதே என்னுடன் பேசிக்கொண்ட வந்த சுவிட்ஸர்லாந்து பொதுமகனின் கூறினார்.
மீண்டும் அவரின் கருத்தை மீட்டுப் பார்க்கலாமா? “இங்குள்ள ஆட்சி, அவர்கள் அவர்களுக்காக ஆளுகின்ற ஆட்சி” – tw