இப்படியும் தேர்தல் வன்முறைகள்!

நஜீப்

தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் மீதான கொலை வெறி! தேர்தல் தொடர்பான வாகன எரிபொருள்களுக்கு தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல். அதே போன்று அரச அச்சகக் கூட்டுத்தாபனத்துக்குத் செலவுக்கு தேவையான காசை வழங்குவதில் ஏற்படுத்தப்படுகின்ற தாமதங்கள்.

இருக்கின்ற உள்ளாட்சி சபைகளை இது வரை கலைக்காமல் தேர்தலை அறிவித்திருப்பது என்பன ஒரு வகை தேர்தல் வன்முறையாகவே பார்க்கப்படுகின்றது.

தேர்தலுக்கத் தேவையான சேவைகளை அரச நிறுவனங்களில் இருந்து பெற்றுக் கொண்டு அரசாங்கம் தமக்குப் பணம் ஒதுக்குகின்ற போது வழங்குவதுதான் வழக்கம் ஆனால் அரச நிறுவனங்கள் யாருக்கும் அப்படிச் சேவைகளை பணத்தை பெற்றுக் கொள்ளாது இதன் பின்னர் வழங்கக் கூடாது என்று ஜனாதிபதி கட்டளையிட்டிருக்கின்றார்.

90 வருடங்களுக்கு மேலான இலங்கை தேர்தல் வரலாற்றில் இப்படியான நெருக்கடிகளைத் தேர்தல் ஆணைக்குழுவுக்கு பதவியில் இருக்கின்ற அரசாங்கம் கொடுப்பது இது வரலாற்றில் முதல் முறை. வரும் 10திகதி வர இருக்கின்ற உயர் நீதி மன்ற வழக்கு  ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றது.

நன்றி: 05.02.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

 "காத்துவாக்குல மூன்று காதல்!" அழகிய சகோதரிகளை மணந்த இளைஞர்! "

Next Story

கேரளாவில் திருநங்கை காதலிக்காக கர்ப்பம்