இதுதான் தாய் பாசம்! அம்மா “மான்” செய்த செயல்!

முதலையிடம் இருந்து தனது மான் குட்டியை காப்பாற்றுவதற்காக தானே அந்த முதலைக்கு இரையாக மாறிய தாய் மானின் செயல் காண்பவர்களின் நெஞ்சை கலங்கடிப்பதாக உள்ளது.

இந்த உலகில் மனிதன் உட்பட ஒவ்வொரு உயிரினமும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுப்பட்டவை ஆகும். உணவு, வாழ்க்கை முறை என அனைத்திலும் இவை வேறு வேறு பழக்கங்களைக் கொண்டவையாக இருக்கின்றன.

ஆனால் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் இடையே ஒரே ஒரு ஒற்றுமை இருக்குமேயானால், அது சந்தேகத்துக்கு இடமில்லாமல் தாய்ப்பாசம் மட்டும் தான் ரொம்ப ஏமாற்றமா இருக்கு

தாய்க்கு நிகர் ஏது..?

தாய்க்கு நிகர் ஏது..?

மிகச்சிறிய பூச்சி முதல் அளவில் பிரம்மாண்டமான யானை வரை அனைத்து உயிரினங்களிலும் நாம் தாய்ப்பாசத்தை காண முடியும். எந்த ஆபத்து வந்தாலும் தனது குட்டியை காப்பாற்றி விட வேண்டும் என்ற உள்ளுணர்வு அனைத்து தாய்களுக்கும் பொதுவானது தான்.

அதில் மனிதர்கள், விலங்குகள் என்ற வேறுபாடு இல்லை. இதனை நாமே பல விலங்குகளிடம் பார்த்திருப்போம். சிங்கத்தின் கர்ஜனைக்கே மூர்ச்சையாகிவிடும் பல விலங்குகள், தனது குட்டியை அதே சிங்கம் வேட்டையாட வந்தால், முடிகிறதோ இல்லையோ அதனுடன் சண்டையிட்டு உயிரிழப்பதை கண்டிருப்போம்.

தனது குஞ்சை இரையாக்க வரும் கழுகுகளை சிறு பறவைகள் கூட வீறுகொண்டு விரட்டுவதை பார்த்திருப்போம். தாய்ப்பாசத்துக்கு இதுபோன்ற பல உதாரணங்களை நம்மால் கூற முடியும். இதுபோன்ற ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்தான் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுள்ளது.

ராட்சத முதலைகள்..

ராட்சத முதலைகள்..

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வனப்பகுதியில் பிரபல தொலைக்காட்சி சேனல் சார்பில் மிருகங்களை படம்பிடிக்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் சிங்கம், சிறுத்தை போன்ற விலங்குகள் வேட்டையாடும் உண்ணும் சம்பவங்களை அந்த தொலைக்காட்சிக் குழுவினர் படம்பிடித்தனர்.

பின்னர் இறுதியாக, முதலைகளின் வேட்டையை படம்பிடிக்க அவர்கள் முடிவு செய்தனர். அந்தக் காட்டில் உள்ள பல நதிகளில் அளவில் பெரிய ராட்சத முதலைகள் வாழ்கின்றன என்பதால், அதனை படம்பிடிப்பதற்காக அவர்கள் அலைந்து திரிந்தனர். இறுதியில், அங்குள்ள ‘பர்னெட்’ என்ற நதிக்கு அவர்கள் வந்தடைந்தனர்.

முதலை வேட்டை..

முதலை வேட்டை..

முதலில் ஆள் அரவம் இன்றி காணப்பட்ட அந்த நதியில் மதிய வேளை நெருங்கியதும் ராட்சத முதலைகள் ஆங்காங்கே தலையை காட்ட ஆரம்பித்தன. இதையடுத்து, தொலைக்காட்சிக் குழுவினர் உஷாராகி முதலைகளை படம்பிடிக்க தொடங்கினர். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட மான் கூட்டம் ஒன்று நதியை கடக்க தொடங்கியதும், அங்கிருந்த முதலைகள் வேட்டையில் களம் இறங்கின. துள்ளிக்குதித்து ஓடிய மான்களை முதலைகள் அசுரத்தனமாக வேட்டையாடி சாப்பிட்டுக் கொண்டிருந்தன.

குட்டியை காப்பாற்றிய தாய் மான்..

குட்டியை காப்பாற்றிய தாய் மான்..

அந்த சமயத்தில், தாய் மான் ஒன்று தனது குட்டியுடன் அந்த ஆற்றை கடக்க அங்கு வந்தது. பின்னர் முதலைகள் கண் அசரும் நேரத்தில் அந்த ஆற்றை கடந்துவிட அது சமயம் பார்த்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக அந்த குட்டி மான் திடீரென ஆற்றில் இறங்கி கடக்க தொடங்கியது. குட்டி மானை பார்த்த ராட்சத முதலை ஒன்று அதனை பிடிக்க ஆக்ரோஷமாக தண்ணீரில் ஓடி வந்தது.

அப்போது அதனைக் கண்டு பரிதவித்த தாய் மான், குட்டியை எப்படி காப்பாற்றப் போகிறோம் எனத் தெரியாமல் தவித்தது. பின்னர், தனது உயிரை கொடுத்து குட்டியை காப்பாற்ற எண்ணிய தாய் மான், குட்டியை விட வேகமாக ஓடிச்சென்று முதலையின் வாயில் வேண்டுமென்றே அகப்பட்டது.

இதில் முதலை அதை கொன்று சாப்பிடவே, குட்டி தப்பித்து கரையேறியது. இந்தக் காட்சியை கண்ட தொலைக்காட்சிக் குழுவினர் கதறி அழுதுவிட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி காண்போரை மனதை உருக்கு.

Previous Story

ரணிலுக்கு எதிராக மகிந்த  உத்தரவு !

Next Story

தேசிய பேரவையிலிருந்து ஜீவன் தொண்டமான் OUT