Nuclear submarine:
ரஷ்யா vs அமெரிக்கா..
நீர்மூழ்கி கப்பல்களை அதிகம்
வைத்திருக்கும் நாடு எது?
ரஷ்யாவை நோக்கி இரண்டு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பியிருப்பதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில், வரட்டும் பார்த்துக்கொள்கிறோம், அதற்காகத்தான் காத்திருக்கிறோம் என ரஷ்யா பதில் சொல்லியிருப்பது உலக நாடுகளிடையே மூன்றாம் உலகப்போர் குறித்த அச்சத்தை அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில், ரஷ்யா-அமெரிக்கா என இரண்டு நாடுகளிடம் எவ்வளவு நீர்மூழ்கி கப்பல்கள் இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் அமெரிக்காவின் பலம் என்ன என்பதை பார்க்கலாம். அமெரிக்கா உலகின் மிகவும் வலுவான கடற்படையை கொண்டிருக்கிறது.
குறிப்பாக நீர்மூழ்கி கப்பல் வரிசையில், லாஸ் ஏஞ்சல்ஸ் சீவோல்ஃப் வர்ஜீனியா ஓஹியோ அமெரிக்காவின் பலம் என 4 வகுப்பு நீர்மூழ்கி கப்பல்களை அமெரிக்க கடற்படை கொண்டிருக்கிறது. இது 4 வகை கப்பல்களிலும் வித்தியாசம் இருக்கிறது.
இதில் ‘லாஸ் ஏஞ்சல்ஸ்’ வகை கப்பல்கள்தான் அமெரிக்க கடற்படையின் முதுகெலும்பாக இருக்கிறது. முதன் முதலில் 1976ல் இது உருவாக்கப்பட்டது. சோவியத் ரஷ்யாவின் அச்சுறுத்தலை சமாளிக்கவே இது கட்டப்பட்டது.
இந்த வகை கப்பல்கள் அணு சக்தியால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. சோவியத் ரஷ்யாவின் கப்பல்களை பின்தொடர்ந்தது மறைந்திருந்து தாக்க இந்த வகை கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. பொதுவாக அணு சக்தியால் இயங்கும் கப்பல்களுக்கு எரிபொருளை நிரப்ப தேவையில்லை.
20-30 ஆண்டுகள் வரை இந்த கப்பல்கள் எரிபொருள் இல்லாமல் இயங்கும். எனவே மேற்பரப்புக்கு வர வேண்டிய அவசியம் கிடையாது. செம ட்விஸ்ட் மொத்தம் எத்தனை கப்பல்கள்? இந்த வகையில் மொத்தம் 62 கப்பல்கள் கட்டமைக்கப்பட்டன.
இதில் தற்போது 24 முதல் 28 கப்பல்கள் இயங்க வருகின்றன. இந்தக் கப்பல் சத்தத்தை குறைந்த அளவில் வெளியிடுவதால், மறைந்திருந்து தாக்க பயன்படுத்தப்படுகிறது. இதற்காகு அடுத்த நிலையில் உள்ள கப்பல்கள் சீவோல்ஃப் என அழைக்கப்பட்டன. இந்த கப்பல்கள் 1977 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட வருகிறது.
அதிகபட்சமாக 50 ஆயுதங்களை கொண்டு இந்த கப்பல் இயங்கும். உலகத்திற்கு அச்சுறுத்தல் இதற்கு அடுத்தபடியாக வர்ஜினியா கப்பல்கள் இருக்கின்றன. அமெரிக்க கடற்படையின் புதிய நீர்மூழ்கி போர்க்கப்பலாக இது அறியப்படுகிறது.
பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் இந்த கப்பலில் இணைக்கப்பட்டுள்ளன. இந்தக் கப்பலும் அணுசக்தியால் இயங்கும் என்பதால் எரிபொருளை நிரப்ப கடல் பகுதியில் மேல் பரப்புக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. இது உலகின் எந்த முளைக்கும் உடனடியாக செல்லும் திறனை கொண்டிருக்கிறது.
பாலிஸ்டிக் ஏவுகணைகள் இந்தக் கப்பல்கள் பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களை அழிக்கவும், மேற்பரப்பில் உள்ள போர்க்கப்பல்களை அழிக்கவும், நிலத்தில் உள்ள இலக்குகளை தாக்கவும், உணவு மற்றும் கண்காணிப்புக்காகவும், சிறப்பு படைகளின் ஆதரவுக்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது.
இதற்கு அடுத்த நிலையில் அமெரிக்க பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கின்றன. இவை ஓஹியோ வகுப்பு கப்பல்கள் என அறியப்படுகின்றன. இந்த கப்பல்களில் மொத்தம் 14 தான் இருக்கிறது. இவை கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை ஏவும் திறனை கொண்டிருக்கிறது.
ரஷ்ய கப்பல்கள் பக்கம் வருவோம் உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கப்பல் கடற்படையை கொண்டிருக்கும் நாடாக ரஷ்யா இருக்கிறது. எண்ணிக்கை அளவில் பார்த்தால் அமெரிக்காவிடை குறைந்த எண்ணிக்கையில்தான் ரஷ்யா நீர்மூழ்கி கப்பல்களை கொண்டிருக்கிறது.
ஆனால் அமெரிக்காவிடம் இருப்பதை விட அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களை ரஷ்யா அதிகம் கொண்டிருக்கிறது. இதுவே ரஷ்யாவில் பலமாகவும் பார்க்கப்படுகிறது. போரி டெல்டா IV இவை இரண்டும்தான் ரஷ்யா நீர்மூழ்கி கப்பலின் முதன்மையான வகுப்புகளாகும்.
போரி வகுப்பு நீர் மூழ்கிக் கப்பல்களில் ‘புலாவா’ என்கிற கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகள் இருக்கின்றன. ஒவ்வொரு போரி கப்பல்களிலும் சுமார் 16 ‘புலாவா’ வகை ஏவுகணைகள் இருக்கும். இந்த ஏவுகணைகள் ஒலியை விட 18 மடங்கு வேகத்தில் செல்லும்.
அதாவது மணிக்கு 22,230 கிலோமீட்டர் வேகத்தில் இது பயணிக்க கூடியது. இந்த ஏவுகணையில் ஒற்றை வெடிகுண்டு இருக்காது. மாறாக பல வெடிகுண்டுகள் இருக்கும். இவை அனைத்தும் அணு ஆயுதங்கள் ஆகும். இந்த அணுகுண்டுகள் ஒரே நேரத்தில் 10 இலக்குகளை சரியாக தாக்கும்.
ஒவ்வொரு அணுகுண்டும் சுமார் 100 முதல் 150 கிலோ டன் வரையில் இருக்கும். ஒரு கிலோ டன் என்பது ஆயிரம் டன் டிஎன்டி வெடிப்பொருட்களின் சக்திக்கு சமமாகும். ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு சுமார் 15 கிலோ டன் எடை கொண்டது.
அப்படியெனில் 100 கிலோ 10 எடை கொண்ட வெடிகுண்டுகள் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். ஒரு புலாவா ஏவுகணை 10 அணு ஆயுதங்களை சுமந்து சென்று பத்து நகரங்களை முற்றிலும் ஒரு தெரயாமல் அழித்துவிடும்.