ஆண்கள் என்று இனம் இனி இருக்காது.

குழந்தையை ஆணா பெண்ணா என தீர்மானிப்பதில் X மற்றும் Y குரோமோசோம்கள் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக ஆண் குழந்தையை தீர்மானிப்பதில் இந்த Y குரோமோசோம் பெரும் பங்கு வகிக்கிறது. இப்படி இருக்கையில் எதிர்காலத்தில் மனிதர்களிடமிருந்து இந்த Y குரோமோசோம்கள் முற்றிலுமாக அழிந்து போக வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Disappearing Y Chromosome Meaning,Y chromosome : மறைந்து வரும் y குரோமோசோம்கள்.. ஆண் இனம் அழியுமா.. ஆய்வு சொல்வது என்ன? - y chromosome is disappearing how does it affect men and women - Samayam Tamil

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு உயிரியலாளர் மற்றும் மெல்போர்னில் உள்ள லா ட்ரோப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஜெனிபர் கிரேவ்ஸ் என்பவர்தான் இந்த அதிர்ச்சியளிக்கும் உண்மையை கண்டுபிடித்திருக்கிறார்.

மரபணுக்கள்: 2000-களின் தொடக்கத்தில், பேராசிரியர் ஜெனிபர் கிரேவ்ஸ் தனது ஆய்வின் மூலம் உலகிற்கு ஒரு எச்சரிக்கையை விடுத்தார்.

மனித பரிணாம வளர்ச்சியை ஆராய்ந்த அவர், ஆரம்பத்தில் X மற்றும் Y குரோமோசோம்கள் சமமான அளவில் இருந்தன என்பதைக் கண்டறிந்தார். ஆனால், பல மில்லியன் ஆண்டுகளில் Y-குரோமோசோம் சுமார் 1,400 மரபணுக்களை இழந்துவிட்டது என்பதை நிரூபித்தார்.

அதிர்ச்சி ஆய்வு: பாலூட்டிகளின் பரிணாமத்தை அவர் ஒப்பிட்டுப் பார்த்தார். பிளாட்டிபஸ் போன்ற பழமையான விலங்குகளின் பாலின குரோமோசோம்களை ஆய்வு செய்தபோது, அவற்றின் X மற்றும் Y குரோமோசோம்கள் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருந்தன. ஆனால் மனிதர்களிடம் வந்தபோது Y-குரோமோசோம் மட்டும் தொடர்ந்து குறைந்து வந்திருக்கிறது மாறியிருந்தது.

குறைந்து வரும் Y குரோமோசோம்கள் : இனி ஆண் குழந்தையே பிறக்காதா அதிர்ச்சியை  ஏற்படுத்திய தகவல்!! – வவுனியா நெற்

அவர் தனது கணக்கீட்டின்படி, ஒவ்வொரு 10 லட்சம் ஆண்டுகளுக்கும் சுமார் 10 மரபணுக்கள் வீதம் Y-குரோமோசோம் அழிந்து வருவதாகத் தெரிவித்தார். இதன்படி பார்த்தால், இன்னும் 4.6 மில்லியன் (46 லட்சம்) ஆண்டுகளில் Y-குரோமோசோம் முழுவதுமாக மறைந்துவிடும் என்று அவர் முதலில் கணித்தார்.

மறுக்கும் சக விஞ்ஞானிகள்: ஜெனிபர் கிரேவ்ஸின் இந்த Y-குரோமோசோம் அழிவு கோட்பாடு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. எனினும், டெனிட் பேஜ் போன்ற சில விஞ்ஞானிகள், கடந்த 25 மில்லியன் ஆண்டுகளில் Y-குரோமோசோம் பெரிய அளவில் மரபணுக்களை இழக்கவில்லை என்றும், அது இப்போது நிலைபெற்றுவிட்டதாகவும் வாதிடுகின்றனர்.

சரி Y குரோமோசோம் முற்றிலுமாக அழிந்துபோனால் என்ன ஆகும்? என்று பலருக்கும் கேள்வி இருக்கிறது. இதற்க இரண்டு விதமான பதில்கள் இருக்கின்றன.

பரிணாம வளர்ச்சி :ஒன்று புதிய பாலின மரபணு உருவாகும். அதாவது, சில வகை எலிகளில் (Mole voles, Spiny rats) ஏற்கனவே Y-குரோமோசோம் மறைந்துவிட்டது. ஆனால், அந்த இனங்களில் ஆண்கள் இன்னும் இருக்கிறார்கள். காரணம், பாலினத்தை நிர்ணயிக்கும் பணி வேறொரு குரோமோசோமிற்கு மாற்றப்பட்டுள்ளது.மனிதர்களிலும் இதே போன்ற பரிணாம வளர்ச்சி ஏற்படலாம்.

விஞ்ஞானிகள் எச்சரிக்கை: Y-குரோமோசோம் மறையும்போது, வெவ்வேறு பகுதிகளில் வாழும் மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான பாலின நிர்ணய மரபணுக்கள் உருவாக வாய்ப்புள்ளது. இது எதிர்காலத்தில் வெவ்வேறு மனித இனங்கள் உருவாகக் காரணமாக அமையலாம்.

இரண்டாவது பதில், மனித இனத்தில் அழிவுதான். ஒருவேளை புதிய மரபணு உருவாகவில்லை என்றால், அது மனித இனத்தின் அழிவிற்கே வழிவகுக்கலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

Previous Story

உடைந்தது அதிமுக

Next Story

Fabio Wardley vs Daniel Dubois -2026