நஜீப்
நன்றி: 15.03.2026 ஞாயிறு தினக்குரல்
தற்போது போதை வியாபாரம் பாதாள உலகு மற்றும் அரச சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள் ஊழல் அரசியல்வாதிகள் படுகொலைகளைப் புரிந்தோர் ஆட்சி அதிகாரத்தை இழந்து பிழைப்புக்கு வழியின்றி ஒட்டாணிகளாக இருக்கின்ற அனைவரும் இப்போது விரைவில் ஆட்சி மாற்றம் ஒன்றுபற்றி கடுமையாக தத்தமது தரப்பில் கலந்துரையாடி வருவதாக அரசுக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றதாம்.
ஆனால் மக்கள் தெளிவான நிலைப்பாட்டில் புரிதலுடன் இருப்பதால் ஆபத்துக்கள் இல்லை என்று அரச தரப்பில் பெரும்பாலானவர்கள் நம்புகின்றார்கள்.
என்றாலும் சதிகாரர்கள் விடயத்தில் எச்சரிக்கை தேவை என்றும் உணரப்பட்டிருக்கின்றது. ஆனால் ரணில் போடுகின்ற ஆலோசனைக் கூட்டங்களை நாம் ஒரு பொழுது போக்கு சந்திப்பு என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சஜித் நாமல் தரப்பினர் போடும் சந்திப்புக்களாலும் நாட்டில் உடனடியாக ஆட்சி மாற்றத்துக்கும் வாய்ப்பில்லை என்று அரசு இந்த ஆலோசனைகளை நிராகரிகின்றது.





