அஷரஃப் பாணியில் அணுரா அதிரடி!

-நஜீப் –

கிழக்கில் மட்டு. அம்பாறை மாவட்டத் தேர்தல் பரப்புரைகளை முடித்துக் கொண்டு திருமலைக்குப் போன ஜேவிபி. தலைவருக்கு அங்கு மு.கா. தலைவர் அஷரபுக்கு ஒரு காலத்தில்  கொடுத்த வரவேற்பைப் போல ஆதரவை மக்கள் அணுராவுக்கு கொடுத்துக் கௌரவித்திருக்கின்றார்கள்.

மூதூர் கிண்ணியா ஆகிய இடங்களில் நடந்த கூட்டங்களில் மிகப் பெரிய சனத்திரலைப் பார்க்க முடிந்தது. மூதூர் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையான தமிழர்களும் வருகை தந்திருந்தனர்.

கூட்டத்தின் பின்னர் அணுர அவர்களிடத்தில் விடைபெற்று வருகின்ற காட்சிகள் மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. குறிப்பாக இளைஞர்கள் அவரை கட்டியணைக்கவும் கையைத் தொட்டுக் கொள்ளவும் பெரும் பிரயத்தனங்களை எடுத்தனர்.

இந்தத் தகவல்களை அணுரகுமார தனது சகாக்களுடன் மிகவும் நெகிழ்சியுடன் பகிர்ந்து  கொண்டும் வருகின்றார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து நமக்குத் தெரிய வருகின்றது.

அணுராவில் அதிரடி விசிட்டால் குறிப்பாக தனித்துவக் கட்சிகள் வைத்து தொழில் பார்க்கின்ற முஸ்லிம் தலைவர்களுக்கு இது பெரும் களக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இதனால் அவர்கள் ஈகோவால் அணுராவை திட்ட-விமர்சிக்கத் துவங்கி இருக்கின்றார்கள்.

நன்றி: 12.02.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

சஜீத் முதுகில் குத்தும் சிறுபான்மைக் கட்சிகள்!

Next Story

மொட்டு, யானை கள்ள கூட்டணிக்கு மன்னிப்பே கிடையாது! - எதிர்கட்சித் தலைவர்