அரேபிகள் அமெரிக்காவுக்கு ஆப்பு!

-யூசுப் என் யூனுஸ்

மத்திய கிழக்கிலுள்ள அனேகமான செல்வாக்கு மிக்க அரபு நாடுகள் அண்மைக் காலம்வரை அமெரிக்க நட்பு நாடுகளாக இருந்து வொசிங்டன் சொல்படியே நடந்தும் வந்தன. தற்போது ஆறு மாதங்களாக இருந்து இந்தப் போக்கில் அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

குறிப்பாக சவூதி அரேபிய உற்பட வளைகுடா நாடுகள் அனைத்தும் இன்று அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்து முற்றாக வெளியேறி விட்டன என்றுதான் சொல்ல வேண்டும். இந்த மனமாற்றத்தால் இதுவரை தமது மிகப் பெரிய எதிரியாக பார்த்து வந்த ஈரானுடனும் அவர்கள் கூட்டணி அமைத்து இரு தரப்பினரும் இணைந்து செயல்படுவது என்றும் முடிவுகளை எடுத்திருக்கின்றார்கள்.

Awkward relations

அண்மையில் ஒபெக்-பெற்றோலிய உற்பத்தி நாடுகளின் கூட்டம் நடைபெற்ற போது நீங்கள் ரஸ்யாவுக்கு ஆதரவாக அங்கு தீர்மானங்களை எடுக்க வேண்டாம்  என்று சவூதி அரோபிய மற்றும் அரபு நாடுகளிடம் அமெரிக்கா நேரடியாகவே கோரிக்கை விடுத்தது.

Political Cartoons - Tooning into Sleepy Joe Biden - America is back ... on our knees - Washington Times

ஆனால் அரபுநாடுகள் அமெரிக்காவின் தீர்மானங்களை காதில் வாங்கிக் கொள்ளாது ராஸ்யாவுக்குச் சாதகமாக அங்கு முடிவுகளை  எடுத்து அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கின்றன.

நன்றி: 09.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ரணிலை விமர்சிக்கும் நாமல்!

Next Story

மொட்டுக்களுக்கு மஹிந்த ஓடர்!