அம்மா என்னைக் கொல்லாதீங்க:கெஞ்சிய 5 வயது சிறுமி

மேற்கு லண்டனில் தாயார் ஒருவர் தமது 5 வயது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவத்தின் முழு பின்னணி வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேற்கு லண்டனின் ஈலிங் பகுதியில் குறித்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கார்ட்டூன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அலிஜா தாமஸ் என்ற 5 வயது சிறுமியை அவரது தாயார் 41 வயது மார்டினா மதரோவா என்பவர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

மார்டினா மதரோவா, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. சிறுமி அலிஜா சம்பவத்தின் போது தாயாரிடம் அழுது கெஞ்சியதாகவும், கொன்றுவிட வேண்டாம் என கதறியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிறுமியை கழுத்தை நெரித்து கொன்ற பின்னர், படுக்கையில் படுக்க வைத்து, தூக்கத்தில் இருப்பது போன்று ஜோடனை செய்துள்ளார். ஆனால், தகவல் அறிந்து மருத்துவ உதவிக்குழுவினரும் ஆம்புலன்ஸ் சேவையும் குடியிருப்புக்கு வந்த நிலையில், மார்டினா மதரோவா அழுது புலம்பியதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி, கொல்லாதீங்க அம்மா என சிறுமி அலிஜா கதறியபோது, உன்னை கண்டிப்பாக கொல்ல மாட்டேன், உனக்கு உதவி தான் செய்கிறேன் எனவும் அவர் தமது மகளிடம் கூறியுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை முடிவில் மார்டினா மதரோவாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாத ஊதியத்தில் 65% குறைக்கப்பட்டதும், சிறுமியை பள்ளிக்கு அனுப்பும் காலக்கெடுவை மீறியதும் மார்டினா மதரோவாவை மன அழுத்தத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

மார்டினா மதரோவா தமது மகளை கழுத்தை நெரித்து கொன்றுள்ளது நிரூபணமான நிலையிலும், அவரது கணவர் டேவிட் தமது மனைவியை பாராட்டியதுடன், சிறுமி அலிஜா மீது உயிரையே வைத்திருந்தவர் என குறிப்பிட்டுள்ளார்.

Previous Story

இருளில் மூழ்குவது தவிர்க்க முடியாத ஒன்று - அமைச்சர்

Next Story

நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற 5 பலி