அமைச்சுக்கு வர மாட்டேன்

-நஜீப்-

இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா அமைச்சரவையில் இருந்து தனது பொருட்கள் எல்லாவற்றையும் அங்கிருந்து அகற்றி இருக்கின்றார். தனது அமைச்சில் உள்ள செயலாளர் பேராசிரியர் ரஞ்சித் திசாநாயக்காவுடன் ஏற்பட்ட முரன்பாடே இதற்குக் காரணம். தான் ஜனாதிபதியுடன் கலந்து பேசி விட்டு ஒரு தீர்மானம் எடுக்க இருப்பதாக அவர் பகிரங்கமாகத் தற்போது கூறி வருகின்றார்கள்.

அவரிடம் ஊடகத்துறையினர் கேட்ட போது எப்படியும் இதன் பின்னர் தான் அந்த அமைச்சுக்கு வரப் போவதில்லை என்று அவர் உறுதி செய்திருக்கின்றார். அவரது சகபாடிகள் அப்படி எல்லாம் செய்ய வேண்டம். இது போன்ற பிரச்சனைகள் அரசியலில் இயல்பானதுதான் என்று அவரைச் சமாளிக்க முனைகின்றார்கள்.

ஜனாதிபதி அந்த செயலாளரை இடமாற்றியோ அல்லது அமைச்சரின் அமைச்சை மாற்றியோ  இதனை சரி செய்துவிட இடமிருக்கின்றது என்று நாம் நம்புகின்றோம். இது கொள்கை ரீதியான முரன்பாடு கிடையாது ஆதிக்கம் தொடர்பான மோதல் மட்டுமே.

நன்றி:ஞாயிறு தினக்குரல் 20.02.2022

Previous Story

சட்டம் படித்தவர் என்பதால் மட்டும் சுமந்திரனால் தீர்வை பெற்றுத்தர முடியுமா?

Next Story

உக்ரைன் கிழக்கு சுதந்திர நாடாக அங்கீகரித்தார் புடின்