அமைச்சர்களின் சலுகைகளை அம்பலப்படுத்திய அநுரகுமார

“ஒரு இராஜாங்க அமைச்சு பதவிக்கு அரசாங்கத்தினால் செலவிடப்படும் நிதி ஊடாக ஒரு பிரதேசத்தின் மக்கள் தொகுதியினரை வாழ வைக்க முடியும்” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அணுர குமார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

“2016 ஆம் ஆண்டு ரணிலின் அரசாங்கம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதற்கமைவாக அமைச்சர்களுக்கு உரித்தான சலுகைகள் இராஜாங்க அமைச்சர்களுக்கும் வழங்கப்படும் என குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஒரு அமைச்சரவை அமைச்சருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் வழங்கப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர்களுக்கு கிடைக்காத ஒரே விடயம் அவர்களால் அமைச்சரவை கூட்டங்களில் பங்குப்பற்ற முடியாமை மாத்திரமே.

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்

அத்துடன் இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு நிரந்தரமாக மூன்று வாகனங்கள் வழங்கப்படுகின்றதாகவும். இந்த வாகனங்களுக்காக வெளி மாகாணங்களில் உள்ளவர்களுக்கு ஒரு வாகனத்திற்காக ஒரு மாததிற்கு 700 லிட்டர் பெட்ரோல் வழங்கப்படுகிறது.

மேலும் “ மேல் மாகாணத்தில் உள்ளவர்களுக்கு ஒரு வாகனத்திற்கு ஒரு மாதத்திற்கு 600 லிட்டர் பெட்ரோல்  காசு

வழங்கப்படுகின்றது. டீசல் வாகனங்கள் என்றால் வெளி மாகாணங்களில் உள்ளவர்களுக்கு 600 லிட்டர் டீசலுக்கான கொடுப்பனவு மற்றும் மேல் மாகாணத்தில் உள்ளவர்களுக்கு 300 லிட்டர் டீசலுக்குமான கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு ஒரு அமைச்சருக்கு பெட்ரோல் வாகனங்களுக்காக 2250 லிட்டர் பெட்ரோல் வழங்கப்படுகின்றது. ஆனால் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு முழுக் குடும்பமும் வாழ்வதற்கு 5 லிட்டர்  மாத்திரமே வழங்கப்படுகின்றது.

தொலைபேசி கட்டணங்கள்

அத்துடன் “ஒரு அமைச்சரின் அலுவலகத்திற்கு 2 தொலைபேசிகளும், அவரின் வீட்டுக்கு 2 தொலைபேசிகளும், கையடக்கத் தொலைபேசி ஒன்றும் வழங்கப்படுகின்றது. இதற்கமைவாக ஒரு அமைச்சருக்கு ஒரு மாதத்திற்கு 40 000.00 ரூபா தொலைபேசி கட்டணம் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றது.

அத்துடன் அமைச்சர்களுக்கான தொலைபேசி கட்டணங்களானது வரி மற்றும் நிலையான கட்டணங்கள் இன்றியே கணக்கிடப்படுகின்றது.

மேலும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவுகள் மாதாந்த கொடுப்பனவுகளாக வழங்கப்படுவதாகவும் குறித்த மாதத்தின் முதலாம் திகதியில் காணப்படும் எரிபொருள் விலைக்கு அமைவாக கொடுப்பனவுகள் கணக்கிடப்படும்.

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வீடுகள்

அனைத்து அமைச்சர்களுக்கும் வீடு வழங்கப்படுகின்றது. அமைச்சர்கள் உண்பது, குடிப்பது என அனைத்துமே அரசாங்கத்தின் செலவுகள். அதேபோன்று ஒவ்வொரு அமைச்சருக்கும் 15 பேர் அடங்கிய நிர்வாகக்குழு ஒன்று வழங்கப்படுகின்றது. குறித்த 15 பேரில் ஐவருக்கு தொலைபேசிகள் வழங்கப்படும். அவர்களின் தொலைபேசி கட்டணங்களும் அரசினால் செலுத்தப்படும்.

பாதுகாப்பு சலுகைகள்

மேலும் அமைச்சர்களின் பாதுகாப்பிற்காக ஒரு அமைச்சருக்கு 8 பொலிஸார் விகிதம் நியமிக்கப்படுகின்றார்கள். அவர்களுக்கு தேவையான வாகனங்களும் வழங்கப்படுகின்றன. இவ்வாறே பொதுமக்களின் நிதிகள் வீணடிக்கப்படுகின்றன.

அத்துடன் குறித்த அமைச்சர்களின் ஊடாக மற்றுமொரு அமைச்சு உருவாகினால் அதற்காக அலுவலகங்கள் வழங்கப்படும் அந்த காரியாலயத்தின் செலவுகள் அங்கு பணிப்புரியும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள், சலுகைகள் என அனைத்தும் அரசாங்கத்தினால் செலவிடப்படும். ஆகவே இவ்வாறான அமைச்சர்கள் குழு ஒன்றை நடத்துவதற்கு இந்த நாட்டு மக்கள் பாடுப்பட வேண்டுமா” எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

Previous Story

கண்டுபிடிப்புகளை அதிகம் நிகழ்த்தும் நாடுகள் - ஐ.நா பட்டியல்

Next Story

மகாராணியாரைக் காண உன் மனைவி வரக்கூடாது: மகனுக்கு உத்தரவிட்ட மன்னர் சார்லஸ்