அமெரிக்காவுக்கு செக்.. சவுதி அரேபியா செய்த காரியம் 

உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்படும் காரணத்தால் கச்சா எண்ணெய்க்கான தேவை தொடர்ந்து குறையத் துவங்கியுள்ளது, இதனால் இதன் விலையும் சரிந்தது.

இந்த நிலையில் சப்ளை மற்றும் டிமாண்ட் அளவை சரி செய்ய OPEC+ அமைப்பு கச்சா எண்ணெய் விலையை உயர்த்திக் கூடுதல் வருமானத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காகக் கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளுக்கு 2 மில்லியன் பேரல் குறைக்க முடிவு செய்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. சவுதி அரேபியா கச்சா எண்ணெய் உற்பத்தியிலும், வளத்திலும் மிகப்பெரிய நாடாக இருக்கும் சவுதி அரேபியா OPEC+ அமைப்பின் அறிவிப்புக்குப் பின்பு அமெரிக்காவுக்கு விற்பனை செய்யப்பட்டும் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளது,

இதேபோல் ஐரோப்பாவிற்கான கச்சா எண்ணெய் விலையைக் குறைத்துள்ளது, ஆசியாவுக்கான கச்சா எண்ணெய் விலையில் எவ்விதமான மாற்றமும் செய்யாமல் உள்ளது. OPEC நாடுகளைக் கடந்த மாதமும் இதேபோன்று சவுதி அரேபியா, அமெரிக்காவை மட்டும் குறிவைத்து அதன் விலையை அதிகரித்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு பேரலுக்கு 0.20 டாலர் அளவிலான உயர்வை அறிவித்துள்ளது.

ஜோ பைடன் பல வாரங்களாக OPEC நாடுகளைக் கச்சா எண்ணெய் உற்பத்தியை அளிக்க வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் தற்போது சவுதி அரேபியா விலையை அதிகரித்துள்ளது.   வெள்ளை மாளிகை புதன் கிழமை OPEC+ அமைப்பு நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைந்த நிலையில் வெள்ளை மாளிகை இந்த அமைப்பை ரஷ்யாவுக்குத் துணை நிற்கிறது எனக் குற்றம்சாட்டியுள்ளது.

இதேபோல் கச்சா எண்ணெய் அதிகம் தேவைப்படும் நேரத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டு உள்ளது எனவும் வெள்ளை மாளிகை கண்டம் தெரிவித்துள்ளது. OPEC மற்றும் OPEC+ Organization of the Petroleum Exporting Countries என்பதன் சுருக்கம் தான் OPEC. இதில் இரண்டு அமைப்புகள் உள்ளது அதில் இருக்கும் நாடுகள் வேறுபடுகிறது.

தற்போது கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்தது OPEC+ அமைப்பு. OPEC அமைப்பு அதாவது OPEC அமைப்பில்

அல்ஜீரியா, அங்கோலா, காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, gabon, ஈரான், ஈராக், குவைத், லிபியா, நைஜீரியா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், வெனிசுலா ஆகியவை உள்ளது.

OPEC+ அமைப்பு OPEC+ அமைப்பில் அஜர்பைஜான், பஹ்ரைன், புருனே, கஜகஸ்தான், மலேசியா, மெக்சிகோ, ஓமன், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சூடான் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகள் உள்ளது.

 

Previous Story

யூடியூப் பிரபலத்தை பார்க்க..பஞ்சாப் டூ டெல்லி! 250 கிமீ சைக்கிளில் சென்ற சிறுவன்..பெற்றோர் அதிர்ச்சி

Next Story

தொலைந்த வேதாளம் வரவு!