இந்தியா வர இருந்த
ஈரான் விமானம் சேதம்!

இந்தியாவுக்கு உதவி பொருட்கள் பெற வர இருந்த ஈரான் விமானம் அமெரிக்கா நடத்திய வான்தாக்குதலில் சேதமடைந்ததாக ஈரான் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். உதவி பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருந்த விமானம் சேதம் அடைந்து இருப்பது உதவி பெறுவதை பாதிப்பதாக அந்த நாடு கூறியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த மாதம் (பிப்ரவரி) 28 ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. ஈரான் மீது ஏவுகணை தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில், ஈரான் உச்ச தலைவர் அல் கமேனி கொல்லப்பட்டார்.
இதற்கு பதிலடியாக ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரானில் பல்வேறு இடங்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக தலைநகர் தெஹ்ரானில் பல கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 500-க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ள நிலையில் மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பல்வேறு இடங்களில் வீடுகள், குடியிருப்புகள் சேதமடைந்ததாலும் செய்வதறியாது திகைக்கும் வரும் மக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகிறார்கள்.
பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாலும் மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இன்றி ஈரான் தவித்து வருகிறது. இந்த நிலையில் தான் மனிதாபிமான அடிப்படையில், ஈரான் மக்களுக்காக அவசர மருத்துவ பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை இந்தியா செய்து வருகிறது.
கடந்த மார்ச் 18ஆம் தேதி இந்தியா தனது முதல் கட்ட மருத்துவ உதவி பொருட்களை ஈரானுக்கு, ஈரான் ரெட் கிரசன்ட் சோசைட்டி மூலம் அனுப்பி இருந்தது.
தொடர்ந்து இந்தியாவிடம் மருத்துவ பொருட்கள் வாங்குவதற்காக ஈரானில் இருந்து விமான ஒன்று புறப்பட தயாராக இருந்தது.
இந்த நிலையில் அந்த விமானம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு உதவி பொருட்கள் பெற வர இருந்த ஈரான் விமானம் அமெரிக்கா நடத்திய வான்தாக்குதலில் சேதமடைந்ததாக ஈரான் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
உதவி பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருந்த விமானம் சேதம் அடைந்து இருப்பது உதவி பெறுவதை பாதிப்பதாக அந்த நாடு கூறியுள்ளது.
ஈரானின் மஷ்ஹத் (Mashhad) விமான நிலையத்தில் நேற்று அமெரிக்கா நடத்தியதாக கூறப்படும் வான்தாக்குதலில், Mahan Air நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு பயணிகள் விமானம் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விமானம் ஏப்ரல் 1ஆம் தேதி இந்தியா வர இருந்ததாகவும் ஈரான் மக்களுக்கான அவசர மருத்துவ பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த தாக்குதல் குறித்து அமெரிக்கா உறுதிப்படுத்தவில்லை. இதுவரை எந்த தகவலும் கூறவில்லை. Mahan Air என்பது ஈரானில் தனியார் நிறுவனமாக செயல்படும் விமான சேவை ஆகும். இது மேற்கு ஆசியா, மத்திய ஆசியா, தென் ஆசியா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விமான சேவைகளை வழங்கி வருகிறது.




