நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 19 வயதான ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஆர்தர் ஆஷ் அரங்கத்தில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் நார்வே நாட்டின் காஸ்பர் ரூட் மற்றும் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் மோதினர்.
இதில் 6-4, 2-6, 7-6 (1), 6-3 என்ற செட் கணக்கில் நார்வே வீரரை வீழ்த்தி 19 வயதே ஆன கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் பெற்றார்.