அப்பக் கடை திறக்கும் அமைச்சர்!

-நஜீப்-

பிரதான விமான சேவை நஸ்டத்தில் இயங்குகின்றது என்றால் அதற்குக் பதில் அப்பக் கடையைத் திறந்தால் அது சிறந்த இலாபத்தைக் கொடுக்கும் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார். அண்மையில் அலுத்கமையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எனவே நஸ்டத்தில் இயங்குகின்ற எல்லா அரச நிறுவனங்களையும் இப்படி அப்பக் கடைகளை திறந்து 2024ல் வருகின்ற வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பெரும் தொகையான பணத்தை தேடிக் கொள்ள முடியுமாக இருக்கும் என்று நம்ப முடியும்.! இன்று நாடுகளில் போக்குவரத்துத் துறையில் நவீன தொழிநுட்பங்களைப் புகுத்தும் நேரத்தில் அமைச்சரிடம் இருந்து இப்படி ஒரு யோசனை.!

மும்பாயிலிருந்து டுபாய்க்கு கடலுக்கடியில் ரயில் சேவையைத் திறக்க இந்தியாவும் எமிரேயிட்டும் ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றன. விமானத்தின் வேகத்தில் ரயில் சேவைகளை நாடுகள் நடத்த முயன்று கொண்டிருக்கின்றன.

அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க விமான சேவைக்குப் பதில் அப்பக் கடைகளைத் திறந்து சர்வதேசத்தின் பார்வையை இலங்கை மீது கொண்டுவர யோசிக்கின்றாரோ என்னவோ.! இதுதான் யதார்த்தமும் நமது தலைவிதியும் கூட.

நன்றி: 08.10.2023 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

மீண்டும் நெருக்கடி : பொருட்களின் விலை அதிகரிக்கும் -மத்திய வங்கி ஆளுநர்

Next Story

கொழும்பில் விரைவில் குண்டு தாக்குதல்!