அனுரகுமார முள் கிரீடம் சூடிய கதை!

-நஜீப் பின் கபூர்-

 (நன்றி ஞாயிறு தினக்குரல்- 06/07/2025)

5,500+ Jesus Christ Crown Of Thorns Stock Photos, Pictures & Royalty-Free Images - iStock

முட்களினால் கிரீடம் சூடி இருக்கின்ற ஒரு மனிதன் அது எந்த நேரத்திலும் தன்னைக் காயப்படுத்திவிடலாம் என்று எச்சரிக்கையுடன் இருக்கு வேண்டும். எனவே நமது ஜனாதிபதி அணுரகுமார மிகவும் எச்சரிக்கையாக தனது பயணத்தை நகர்த்த வேண்டி இருக்கும். இதனை அவர் நன்கு அறிந்து வைத்திருக்கின்றார் என்றும் நாம் நம்புகின்றோம். தேர்தல் காலங்களில் நாம் யதார்த்தங்களை களநிலமையை சொல்லி வந்தபோது அது அணுர தரப்புக்கு சாதகமாக சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

இப்போது அணுரதரப்பினர் ஆட்சியாளர்களாக இருப்பதால் சில வேலைகளில் நமது வார்த்தைகள் – கருத்துக்கள் அரசு மீதான விமர்சனமாக எடுத்துக் கொள்ளப்படவும் இடமிருக்கின்றது. அரசு மீதான விமர்சனங்களுக்கு இன்னும் சில காலத்தைக் கொடுப்பதுதான் நாகரிகமானது-நியாயமானது என்பது எமது நிலைப்பாடாகவும் இருக்கின்றது. அதற்காக வார்த்தைகளை விழுங்கிவிடவும் முடியாது.

அணுரகுமார திசாநாயக்க அரசாங்கம் பற்றிப் பேசுவதற்கு முன்னர் தேசிய அரசியலில் அவர்களின் பிரவேசம் பற்றி சற்று சுருக்கமாக வாசகர்களுக்கு நினைவுபடுத்துவது நல்லது எனத் தோன்றுகின்றது. 14.07.1943ம் ஆண்டு தெற்கு தங்காலையில் றோகண விஜேவீர பிறந்தார். அவரது தந்தை ஒரு இடதுசாரியாக செயலாற்றி வந்திருக்கின்றார். இதானால் அந்த நாட்களில் அவரை வலதுசாரி ஐதேக. இம்சைப்படுத்தியது மட்டுமல்ல காயப்படுத்தி முடமாக்கியும் விட்டிருந்தனர். இந்தப் பின்னணியில் எஸ்.ஏ.விக்கிரமசிங்ஹ சிபார்சின் பேரில் ரோஹண விஜேவீர ரஸ்யா-மொஸ்கோவுக்க வைத்திய கல்விக்காக அனுப்பி வைக்கப்படுகின்றார்.

அங்கு ஒரு ஜனரஞ்சக மாணவராக இருந்த இவர் பல்கலைக் கழகத்தில் மாணவ அமைப்பின் பல பதவிகளையும் வகித்திருக்கின்றார். ஆனால் அந்த நாட்களில் இடதுசாரிகள்  ரஸ்யா-மொஸ்கோ பிரிவு சீன-பீகிங் பிரிவு என்று இரு பிரதான குழுக்கள் இருந்தன. அல்பேனிய பிரிவு என்றும் ஒன்று இருந்தது. விஜேவீர ரஸ்யாவில் படித்தாலும் இந்த பிரிவுகளில் சீன-பீகிங் அணி ஆதரவாலராக அங்கு செயல்பட்டிருக்கின்றார். அதனால் விஜேவீர விடுமுறையில் நாட்டுக்கு வந்து மீண்டும்  அங்கு போக வீசா வழங்க ரஸ்யா மறுத்து விட்டது. இதனால் அவரது வைத்திய படிப்பும் இடை நடுவில் கைவிடப்பட்டது.

அந்தக் காலம் சர்வதேச மட்டத்தில் இடதுசாரிகள் மிகவும் செல்வாக்குடன் இருந்தனர். தனது பட்டப்படிப்புக்கு முற்றுப் புள்ளி வந்ததால் விஜேவீர துவண்டு போகவில்லை. தனது இடதுசாரி கொள்கையுடைய ஒரு அரசாங்கத்தை அவர் இங்கு தோற்றுவிக்க கனவு கண்டார். அந்த கனவை நோக்கி அவர் பயணிக்கத் துவங்கினார். அதற்காக அவர் பட்டதுயரங்கள் ஏராலம்.

ஒரு சமயம் பேக்கரி ஒன்றில் கூலிக்காரனாகவும் மற்றுமொரு சந்தர்ப்பத்தில் கொழும்பு போய் வருவதற்கு பணத்தை  தேட தெற்கு நகரான அம்பலந்தோட்டை சந்ததையில் நாட்டாமையாகவும் வேலையும் அவர் பார்த்திருக்கின்றார். விஜேவீர 14.5.1965 திகதி தனது சகாக்களை இணைத்துக் கொண்டு ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்கினார். அதற்கு  மக்கள் விடுதலை முன்னணி என்ற நாமம் சூட்டப்பட்டது. அப்போது அவருக்கு வயது 22.

பின்னர் கட்சி உறுப்பினர் தொகை அதிகரிக்க காடுகளை வெட்டி பல இடங்களில் விவசாய பண்ணைகளை நடாத்தி செலவுக்கு நிதி சேகரித்திருக்கின்றார்கள். அவருடன் இருந்தவர் பலர் இன்னும் உயிருடன் இருந்து இந்த கதைகளை அவ்வப்போது உறுதிப்படுத்தியும் வருகின்றார்கள். தமக்கு எதிரான ஒரு இடதுசாரி இயக்கம் நாட்டில் வளர்ந்து வருவதைக் கண்ட சம்பிரதாய இடது சாரிகளான இலங்கை கம்யூனிட் மற்றும் சமசமாஜக் கட்சியினரும் விஜேவீரவையும் அவரது மக்கள் விடுதலை முன்னணியையும் சிஐஏ உளவாளிகள் என்று குற்றம் சாட்டி வந்தனர்.

இந்தக் குற்றச்சாட்டு சற்று ஆபத்தானது என்று புரிந்து கொண்ட விஜேவீர சம்பிரதாய இடதுசாரிகளின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் விஜேவீPர தலைமையிலான அணியினர் அன்று நடந்த தேர்தலில் (-1970ல்)  ஸ்ரீ மா அம்மையாருக்கு ஆதரவாக செயலாற்றினார்கள். தேர்தலில் சம்பிரதாய இடதுசாரிகளும் அம்மையாரை ஆதரித்ததால் அவர்களுக்கு விஜேவீர அணியை சிஐஏ. காரர்கள் என்று தொடர்ந்தும் குற்றம் சாட்ட முடியாது போனது.

Sanguinary memories : JVP insurgence of ...

தனக்கு ஆதரவாக நாடுபூராவும் பல்லாயிக்கணக்கான இளைஞர்கள் களத்தில் இறங்கி இருந்ததை கண்ட ஸ்ரீ மா அம்மையார் ஒரு சந்தர்ப்பத்தில் தனது சகா பதியுத்தீன் மஹ்மூத் அவர்களிடம் இதனைச் சொல்லி நெகிழ்ந்திருக்கின்றார். அம்மையார் தேர்தலில்  வெற்றி பெற்ற போது இந்த பதி கல்வி அமைச்சரானார்.

தேர்தலில் அம்மையாருக்கு ஆதரவு வழங்கிக் கொண்டு அதே நேரம் நாட்டில் ஆயுதப் போரட்டத்தின் மூலம்  பதவியைக் கைப்பற்றும் ஒரு முயற்சியிலும் இவர்கள் இறங்கி இருந்தனர். தம்மீது சந்தேகம் வந்து விடக்  கூடாது என்ற ஒரு அரசியல் உத்தியாகத்தான் இவர்கள் அந்தத் தேர்தலில்  காய்நகர்த்தி இருந்தனர். ஆயுதங்களை சேகரிக்கும் வேலைகளில் இவர்கள் இறங்கினார்கள். பல இடங்களில் ஆயுத பயிற்சிகள் நடந்த போது பலர் காயப்பட்டனர். நமது மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் கைகள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

1971 ஏப்ரல் ஐந்தாம் திகதி நாடு பூராவிலும் உள்ள பொலிஸ் நிலையங்களை ஒரே நேரத்தில் தாக்கி கைப்பற்றுவது. பிரதமர் ஸ்ரீ மா அம்மையாரை கைது செய்யவும் இவர்கள் ஏற்பாடுகள் செய்திருந்தனர். இவர்களது தகவல் பறிமாற்றங்கள் முறையாகச் சென்றடையாததால் ஒரு நாள் முன்கூட்டி வெள்ளவாய பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டதால் இவர்கள் புரட்சி வெற்றி பெறவில்லை. அன்றைய தாக்குதலில் இவர்கள் 76 பொலிஸ் நிலையங்களைத் தாக்கி இருந்தனர்.

இதில் பல பொலிஸ் நிலையங்கள் சில மாதங்கள் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் இந்தக் கிளர்ச்சியில் கொல்லப்பட்டனர். கிளர்ச்சி நடந்த போது முன்கூட்டிக் கைது செய்யப்பட்டிருந்த விஜேவீர யாழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கிளர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் போல கைது செய்யப்பட்டு அல்லது சரணடைந்த போது அவர்கள் புணருத்தாபன முகாங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு கூட இவர்கள் தமது வகுப்புக்களை நடாத்தி தம்மை அரசியல் ரீதியாக விளிப்பூட்டிக் கொண்டிருந்தனர்.

1987-1989 களிலும் இவர்கள் மீண்டும் ஒரு கிளர்ச்சியை நாட்டில் ஏற்படுத்தி இருந்தனர். இது அடக்கு முறைக்கு எதிரான தமது செயல்பாடுகள் என்று அதற்கு இவர்கள் விளக்கம் கொடுத்து வந்திருக்கின்றனர். இந்த கிளர்ச்சியிலும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதில் உயிர் பிழைத்தவர்தான் நமது ஜனாதிபதி அணுர குமார திசிநாயக்க மற்றும் செயலாளர் டில்வின்.  இப்படி பிழைத்துக் கொண்ட பலர் இன்று நமது நாடாளுமன்றத்தில் இருக்கின்றார்கள். அது ஒரு நீண்ட பட்டியலாக இருப்பதால் இங்கு சுட்டிக்காட்ட முடியவில்லை.

1977ல் சிறையில் இருந்த விஜேவீரவை அப்போதய ஜனாதிபதி ஜேஆர். ஜெயவர்தன விடுதலை செய்தார். அதன் பின்னர் 1982ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் விஜேவீர ஜேஆர். க்கு எதிராக களத்துக்கு வந்து அன்று 4.16 சதவீதமான வாக்குகளைப் பெற்றிருந்தார். கண்டி-உலப்பனயில்  கைது செய்யப்பட்ட விஜேவீர 1989.11.14ம் திகதி கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.  அப்போது அவருக்கு 46 வயது.

The JVP's Military Battle for Power – The Island

1987-1989 கிளர்ச்சியில் ஜேவிபி.யின் அனைத்து அரசியல் செயற்குழு உறுப்பினர்களும் அப்போது படுகொலை செய்யப்பட்டிருந்தனர். எஞ்ய ஒரே உறுப்பினர் சோமவங்ச அமரசிங்ஹ மட்டுமே. பிற்காலத்தில் தலைவராக இருந்தவர். இவர் எப்படித் தப்பிப் பிழைத்தார் என்பதை நாம் அவர்களது கட்சி செயலகம்-பெலவத்தையில் நடந்த ஒரு சந்திப்பில் நேரடியாக அவரிடமே கேட்டு அந்தக் கதையை நமது வார இதழுக்கு எழுதிய  கட்டுரையில் அப்போதே சொல்லி இருந்தோம்.

அன்றுதான் அவர் தப்பிய கதை முழு நாட்டுக்கே தெரியவந்தது. இது பற்றி அவரிடம் இந்தக் கட்டுரையாளன் கேட்ட போது, இன்றுவரை எவருமே இதனை தன்னிடம் கேட்டதில்லை என்றுதான் அவர் தனது கதையை எமக்குச் சொன்னார்.

1987-1989 நெருக்கடிக்குப் பின்னர் சிலகாலம் தலை மறைவாக இருந்த ஜேவிபி. மீண்டும் அரசியல் களத்துக்கு வந்து பல நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டனர். சந்திரிக்காவுடன் கூட்டணி போட்டு அவர்கள் நிறுத்திய (40) அனைத்து வேட்பாளர்களும் மாவட்டத்தில் முன்னணிக்கு வந்து வெற்றி பெற்றிருந்தனர் எனவே மக்களுக்கு அவர்கள் மீது ஒரு நம்பிக்கை இருப்பதும் அன்றே தெரிந்தது.

பின்னர் போர் காலத்தில் மஹிந்தாவுக்கும் அதன் பின்னர் நல்லாட்சி அமைய மைத்திரிக்கும் இவர்கள் ஆதரவாக நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கி வந்திருக்கின்றனர். இது என்ன முரண்பாடு என்று கேட்டால் அப்போதய அரசியல் சூழ்நியைக் கருத்தில் கொண்டு எடுத்த முடிவுகள் என்பதுதான் அவர்கள் விடும் கதை இருக்கின்றது.

இப்போது அணுரகுமார திசாநாயக்க முள்ளில் கிரீடம் சூடி இருக்கின்ற ஜனாதிபதி பதவி குறித்த கதைக்கு நேரடியாக வருவோம்.  அணுரகுமார திசாநாயக்க ஜேவிபி. கட்சியின் தலைவராக வந்தபோது அவர் பற்றிய பெரிய நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் இருக்கவில்லை.

அவர் தலைமையில் நடைபெற்ற தேர்தல்களில் கூட அவரது அரசியல் இயக்கம் பெரும் செல்வாக்குடன் எழுர்ச்சி பெற்றிருக்கவில்லை. ஜேவிபி. பின்னர் என்பிபி. என்று மாற்றப்பட்டு ஜேவிபி. உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் தம்முடன் இணைந்து அரசியல் செய்யும் வாய்ப்பை அணுர திறந்து விட்டிருந்தார்.

Enter Homo Extremum? - Groundviews

அந்தத் தேர்தல்களிலும் கூட அவர்கள் என்னதான் கவர்ச்சிகரமான பரப்புரைகளை செய்தாலும் கடைசியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் (2019) 4.1 சதவீத வாக்குகளையும் பொதுத் தேர்தலில் (2020) 3.8 சதவீத வாக்குகளை மட்டுமே பெறமுடிந்தது.

எனவேதான் கடந்த ஜனாதிபதித் தேர்தல்வரை இவர்கள் மூன்று சதவீம் என்று ஏலனமாக அவர்களது அரசியல் எதிரிகள் அழைத்து வந்தனர். 2024 ஜனாதிபதித் தேர்தல்வரை அவர்கள் இலங்கை அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்றும் ஓர் இடத்திற்கு அவர்கள் வந்திருக்கவில்லை.

ராஜபக்ஸாக்களின் அடாவடித்தன அரசியலும்  கோட்டாபே ராஜபக்ஸவின் பலயீனமான செயல்பாடும்தான் நாட்டில் ஒரு அரசியல் மாற்றத்துக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. அதனை அணுரகுமார திசாநாயக்க தலைமையிலான அணி தனக்கு வாய்ப்பாக மாற்றிக் கொண்டனர். அதுவரை இலங்கை அரசியிலில் செல்வாக்குடன் இருந்த ஐதேக. – ஐமக என இரண்டாக பிளவுபட்டிருந்தது. அவர்கள் ஒண்றினைந்திருந்தாலும் கூட 2024 ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் மக்கள் மத்தியில் ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டிருந்தனர் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் அணுராவுக்கு சாதகமாக அமைந்தது.

How Corruption Affects Emerging Economies

அரகல வரும்வரை ஜேவிபி அல்லது என்பிபி. அதிகாரத்தை கைப்பற்றுகின்ற ஒரு நிலைக்கு வந்திருக்கவில்லை. இதற்க நல்ல ஒரு உதாரணம்தான் அவர்களின் உயர்மட்டத் தலைவர்களுடன் நாம் ஒரு முறை கலந்துரையாடிக் கொண்டிருந்த நேரத்தில் தற்போத அமைச்சர் சமந்த வித்தியாரத்தன நாம் எப்போது ஒரு தேர்தலில் பத்து சதவீதம் எல்லையைக் கடந்து போகின்றோமோ அதன் பின்னர் நடைபெறுகின்ற தேர்தலில் நாம் நிச்சயம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விடுவோம் என்று நமக்கு நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார். எனவே அந்த ஒரு வளர்ச்சி இயல்பாக வரும் முன்னரே அரகலய அவர்களை அதிகாரத்துக்குக் கொண்டு வந்து விட்டது.

tilvin-silva – Lanka Voice – Experience the power of media with the views of the people

அன்று யாரெல்லாம் ராஜபக்ஸாக்களை அதிகாரத்துக்குக் கொண்டுவர வாக்களித்திருந்தார்களோ அவர்கள்தான் இன்று இந்த என்பிபி. யையும் அதிகாரத்துக்குக் கொண்டு வந்தது அவர்களுக்கு வரலாற்றில் முதன் முறையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் கொடுத்து அழகு பார்த்திருக்கின்றார்கள். இது அதிரடியானது மட்டுமல்ல அதில் எச்சரிக்கையும் தொக்கி இருக்கின்றது என்பது எமது கருத்து. இந்த என்பிபி. யின் பெருவளர்ச்சியில் தனிப்பட்ட ரீதியில் அதன் தலைவர் அணுரகுமார திசாநாயக்க அவர்களின் ஆளுமையும் ஆற்றலும் மட்டுமல்லாது ஜேவிபி. கட்சிக் கோட்பாதர் விஜேவீரவின் தியாகமும் காரணமாக இருந்து வருகின்றது என்பதும் எமது கருத்து.

தற்போது அணுரகுமார திசாநயக்க அணிந்திருக்கின்ற ஜனாதிபதிப் பதவியை முள்ளிலான ஒரு கிரீடம் என்று நாம் ஏன் குறிப்பிடுகின்றோம் என்றால் நாடு வக்குரோத்து தேசமாக சர்வதேச சமூகத்தால் அறிவிப்புச் செய்யப்பட்டிருந்த ஒரு நிலையில்தான் அவர் இங்கு அதிகாரத்துக்கு வந்திருக்கின்றார். எனவே இரவோடு இரவாக மாற்றங்கள் நடைபெறவேண்டும் என்று எவரும் எதிர்பார்க்க முடியாது. மேலும் அணுரகுமார தiலைமையிலான  அணி ஊழலற்ற ஆட்சி தருவோம் கள்வர்கள் யாராக இருந்தாலும் பிடித்துக் கூட்டில் அடைப்போம் என்று கூறி இருந்தனர்.

Mechanisms to Curb Political Corruption

இதில் மக்கள் கடுகதி வேகத்தை எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் ஒரு ஜனாநாயக நாட்டில் அப்படி பயணிக்க முடியாது. அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகள் முதல் காரியாலயங்களில் பணிபுரிகின்ற சிற்றுழியர்கள் வரை இந்த ஊழல் மிக்க நிருவாகத்துக்கு தெரிந்தும் தெரியாமலும் ஒத்துழைப்பு வழங்கி இருக்கின்றார்கள். இதனால் உண்மையைக் கண்டறிவதில் பெரும் நெருக்கடிகளை ஆட்சியாளர்கள் எதிர்நோக்குவதும் தவிர்க்க முடியாது.

அத்துடன் ஊழல் மிகுந்த கடந்த கால ஆட்சிக்கு பெரும் முதலாளிமார் போதை வியாபாரிகள் பாதள உலகக் குழுக்கள் ஒத்துழைப்பு வழங்கி வந்திருக்கின்றன. இது இருதரப்பு நலன்கள் சார்ந்த விடயமாக இருப்பதால் குற்றவாளிகள் பக்கத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இருக்கின்றார்கள். அவர்களைப் பிடித்து சிறையில் தள்ளும் முயற்சியில் ஆட்சியாளர்களுக்கு பல வகையான நெருக்கடிகள். அது மட்டுமல்லாமல் இவர்கள் மீது நடவடிக்கை என்று வரும் போது சர்வதேச தலையீடுகளுக்கும் வாய்ப்பு இருக்கின்றன.

இது போன்ற நிறையவே நெருக்கடிகளுக்கு ஜனாதிபதி அணுர முகம் கொடுக்கும் போது அவர் அணிந்திருக்கின்ற ஜனாதிபதி கிரீடம் முள்ளிலானது என்பது தெரியவரும். அணுரகுமார திசநாயக்காவின் அரசியல் இயக்கம் கடும்போக்கானது என்பதால் முள்ளிலான இந்தக் கிரீடம் தனக்கு என்னதான் காயங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும் அதுகண்டு அவர் பின்வாங்கி விடுவார் என்றும் நாம் எதிர்பார்க்க முடியாது. மக்கள் ஆணையும் அரசியல் களமும் அவர்களுக்கு சாதகமாக இருப்பதால் கடினமான இந்தப் பயணத்தை அவர்கள் வெற்றிகரமாகத் முன்னெடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும்.

 

Previous Story

'யூதர்களிடம் கருணையே காட்டாதீர்கள்'

Next Story

களம் பலஸ்தீனுக்கு சாதகமாக மறுகின்றது!