அனுர ஞாயிறு (22.09.2024) மாலை 9 வது ஜனாதிபதியாக பதவி ஏற்கின்றார்-

தேர்தலே இன்னும் நடைபெறவில்லை. அப்படி இருக்க அனுர எப்படி ஜனாதிபதியாக பதவி ஏற்பது என்று குமுறுகின்றவர்களும் இருப்பார்கள். ஆனால் தேசிய மக்கள் சக்தி செயல்பாட்டாளர்கள் தமது வெற்றியில் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள்.

அவர்கள் தமது வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க 22ம் திகதி ஞாயிறு மாலை ஐந்து மணிக்கு நாட்டின் 9வது ஜனாதிபதியாக எளிமையான ஒரு வைபவத்தில் பதவியேற்கின்றார். என அசோக்க பீரிஸ் குறிப்பிடுகின்றார். உளவுத்துறையினர் தமக்கு இதனை உறுதி செய்திருப்பதாகவும் மேலும் அவர் குறிப்பிடுகின்றார்.

அவர்களது நம்பிக்கைய உறுதி செய்யும் வகையில் சர்வதேச ஊடகங்களும் அனுர வெற்றி பற்றிய செய்தி இப்போது வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இங்குள்ள வெளிநாட்டுத் தூதுவராலயங்களும் அனுர வெற்றியை உறுதி செய்து தமது நாடுகளுக்குத் தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றன.

ஜனாதிபதி ரணிலும் தானே தனது வெற்றியை உறுதி செய்து பதவி ஏற்புக்கு முகூர்த்தம் கூடப் பார்த்திருப்பதாக ஊடகங்களுக்கும் சொல்லி இருக்கின்றார். அனுர வெற்றி பற்றிய கூறுபவர்.

-அசோக்க பீரிஸ்

(முன்னாள் அமைச்சரவைச் செயலாளரும் அரசில் உயர் பதவிகள் பலவற்றையும் வகித்த சிறந்த நிருவாகி என்பதும் குறிப்பிடத் தக்கது.)

Previous Story

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஹரிணி பிரதமர்!

Next Story

அகுரண  PMJD ஒரு தரப்பினர் NPP க்கு ஆதரவு