“வரலாற்றில் பாரிய மாற்றம்”
நமது அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தனிக்கட்சியான 2/3 என்ற பெரும்பான்மையை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் ஒரு தனிக் கட்சி இதைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
வரலாறு காணாத வெற்றி
இந்த வெற்றியின் மூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் எந்தவொரு பிரேரணை மற்றும் சட்டங்கள் எந்தவொரு கட்சியின் ஆதரவின்றி நிறைவேற்ற முடியும்.
இலங்கை முழுவதும் நடைபெற்ற தேர்தலில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் மட்டும் தேசிய மக்கள் சக்தி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி
NPP 146
SJB 35
TAC 7
NDF 3
SLPP 2
SLMC 2
ACMC 1