அது’ சேற்றில் நட்ட தடி!

-நஜீப்-

ஒரு சந்தப்பத்தில் இதன் பின்னர் நாங்கள்தான் இந்த நாட்டில் மீட்சியாளர்கள் எங்களை விட்டால் வேறு ஆட்கள் கிடையாது என்று கூவி அரசை விமர்சித்தும் மற்றமொரு இடத்தில் அடங்கிப் போய் அரசுடன் மோத வேண்டிய தேவை எமக்கு கிடையாது.எனவே நாம் அரசில் இருந்து வெளியே போக வேண்டிய எந்தத் தேவையுமில்லை என்று வேறு கதைக்கின்றார்கள்.

நமக்கு வருகின்ற அந்தரங்கத் தகவல்படி பதவி வகின்றவர்களும் தன்னலத்தை நாடுகின்றவர்களும் கடைசி நிமிடம் வரை அரசில் ஒட்டிக் கொண்டிருக்க ஆர்வமாக இருப்பதால் சு.கட்சி இரு தலைக் கொல்லி எறும்பின் பாத்திரத்தில் தற்போது நடந்து கொள்கின்றது.

மக்கள் நலன்களை விட தன்னலம்தான் தீர்மான விடயத்தில் குறுக்கே நிற்க்கின்றது. இதனால்தான் தலைவரும் செயலாளரும் கூட சேற்றில் நட்ட தடியின் நிலையில் நடந்து கொண்டிருக்கின்றார்கள். இளவுகாத்த கிளியின் கதைதான் இவர்களுக்கும் நடக்கும்போல் தெரிகின்றது.

-நன்றி: ஞாயிறு தினக்குரல் 30.01.2022

Previous Story

நீர்வீழ்ச்சியில் மூழ்கி தமிழ் யுவதிகள் - விபரம் 

Next Story

இஸ்லாம் பாடப் புத்தகங்கள் மீளப்பெறப்படுவதன் நோக்கம் என்ன?