அதிர்ந்துபோன கோட்டா!

நஜீப்   

 நன்றி: 04.10.2026 ஞாயிறு தினக்குரல் 

பேரினவாதத்துடன்ஆட்சியைக் கைப்பற்றிய கோட்டாசுவரில்பட்ட பந்தானார்.மிகக்குறுகிய நாட்களிலே மனிதன் உயிரைப்பிடித்துக் கொண்டு பின்கதவால் ஓடியவர் ரணில் தயவால் நாடு திரும்பினாலும் அரசியல் பக்கம் தலைகாட்ட முடியாத நிலை. கட்சிக்காரர்களே நமக்கு இந்த நிலைக்கு கோட்டாவை சாடுகின்றார்கள்.

அதிகாரத்தில் இருந்த போது போர் வெற்றிகளுக்கு தானே முழுக் காரணம் என மார்தட்டியவர்இன்று நீதிமன்றில் பெட்டிப் பாம்பு நிலையில்போருடன் எனக்கு சம்பந்தமே இல்லை என பல்டி. அத்துடன் தனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை என்றவர்தனது முன்னைய கருத்துக்கு மாற்றமாக நீதிமன்றில் வாக்குமூலமும் கொடுத்தார்.

மனிதன் மிகுந்த அச்சத்தில் இருப்பது தெரிகின்றது. நீதி மன்றம் வந்தவரை ஒரு இளம் பொலிஸ்காரர் உடலைத் தொட்டு பரிசோதனை செய்ய கோட்டா அதிர்ந்து போக பக்கத்தில் இருந்த  அதிகாரிகள் ஆளை உள்ளே விடுங்கள் என்று சமாளித்திருக்கின்றார்கள்.

Previous Story

ඥානසාරට වසර 20 ක සිරදඬුවම්.නීතිපති බේරයි.! පෙම්වතියගේ දරු ගැබ.මෛත්‍රී, ඥානසාර හමුවේ.

Next Story

ஓமன் துணை விமானியை விட்டுடுங்க..?