அதிரடியாக அகுரண வந்த குண்டு!

-நஜீப்-

கதை வந்ததும், உண்மையைத் தெரிந்து கொள்ள பிரதேசத்திலுள்ள  ஜனரஞ்சக சட்டத்தரணியை தொடர்பு கொண்டு கேட்டோம். ஆம் செய்தி உண்மைதான் என்று அவர்  உறுதிப்படுத்தினார். கடந்த 18ம் திகதி மாலை நேரம் அக்குரண பள்ளி வந்த பொலிசார், பிரதேசத்தில் குண்டுத் தாக்குதல் ஒன்று பற்றி தகவல் வந்திருக்கின்றது.

நீங்கள் பாதுகாப்புடன் நடந்து கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கி விட்டுப் போய் இருக்கின்றார்கள். இது போலத்தான் ஈஸ்டர் தாக்குதல் பற்றி தகவல் கிடைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் பேரழிவு வந்தது.

நமக்கு இந்தச் செய்தி தொடர்ப்பில் பல சந்தேகங்கள்.! ஈஸ்டர் தாக்குதல் நடந்து இன்று நான்கு வருடங்கள். அந்தப் படுகொலைலையைச் செய்தவர்கள் முஸ்லிம் பயங்கரவாதிகள். அதற்குப் பலி தீர்க்க ஒரு தாக்குதல் என இது சொல்ல வருகின்றதா.?

அல்லது மீண்டும் வேதாளம் முறுங்கை மரத்தில் ஏறி விட்டதோ? என்றும் எண்ணத் தோன்றுகின்றது. அரசியல் பிழைப்புக்காக எது வேண்டுமானாலும் நடக்கலாம் இது நாம் அறிந்த வரலாறு. குடிகள் எச்சரிகையாக இருந்து கொண்டால் ஆரோக்கியமாக இருக்கும். இப்போது பொலிஸ் இது போலியான தகவல் என்று செல்கின்றது. என்ன வேடிக்கை இது.

நன்றி23.04.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

‘என் வயது 45, என் உடலின் வயது 22’ - இளமையை தக்க வைக்க அமெரிக்க தொழிலதிபர் என்ன செய்கிறார் தெரியுமா?

Next Story

புத்தாண்டுடன் சந்திக்கு வரும் புதுப் புரளிகள்!