அதிகாரிகள் தான் எதிரணி!

நஜீப்

நன்றி:08.02.2026 ஞாயிறு தினக்குரல்

3d white people looks for an idea lying on a red question mark, isolated white background, 3d image. Little white man question mark illustrations

Opposition parties’ attempts to rally against Government

இன்று இந்த அரசுக்கு அரசியல் எதிரிகள் எவரும் இல்லை என்ற நிலை. சஜித் மற்றும் நாமல் பொருட்டே கிடையாது. அரசு தனிச்சிங்கமாகத்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. ‘எனது பார்வையில் இந்த அரசுக்கு எதிரான மிகப் பெரிய சக்தி நிருவாகத்திலுள்ள சில அதிகாரிகளே.’

அவர்களினால்தான் இந்த அரசுக்கு பெரிய ஆபத்துக்கள் இருந்து வருகின்றது. இதுவும் சனத் பாலசூரிய சொன்ன கதை. தனிப்பட்ட ரீதியில் நமது நிலைப்பாடும் இதுதான். இதனை நாம் பல இடங்களில் வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.

சிற்றூழியர் முதல் உச்சமட்ட நிருவாக அதிகாரிகள் மட்டத்தில் குறிப்பாக சட்டம் நீதி பொலிஸ் என்ற அனைத்து நிருவாக மட்டங்களிலும் இந்தக் கழுத்தறுப்பு இன்று நடந்து வருகின்றது.

என்பிபி. அரசு பதவிக்கு வந்ததால் பொருளாதார ரீதியிலும் வரப்பிரசாதங்களிலும் இந்த அதிகாரிகள் பாதிக்கப்பட்டிருப்பதால் உள்ள கோபம் தான் இந்த அரசுக்கு ஒத்துழைக்காமைக்கான அடிப்படைக்காரணங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Story

மக்கள் வீதிக்கு வருவார்கள்!

Next Story

INDIA:சன் காலை செய்திகள் | 09-02-2026