“அடி தூள்”.. பஞ்சாப்பின் பட்டைய கிளப்பும் ஆம் ஆத்மி!

ஆத்மி பஞ்சாப்பில் பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறது.. வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.. இதையடுத்து, அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த்சிங் மானுக்கும் செல்வாக்கு பெருகி கொண்டிருக்கிறது.

5 மாநில தேர்தல்களில் மிகவும் கவனத்தை பஞ்சாப் மாநிலம் ஈர்த்துள்ளது.. இந்த முறை பஞ்சாப் தேர்தலில், முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் கெஜ்ரிவால் கவனமாக செயல்பட்டார்..

கடந்த 2017-ல் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி பஞ்சாப்பில் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணமே, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமலே தேர்தலை சந்தித்ததுதான் என்று ஒரு பிம்பம் இன்றுவரை இருக்கவே செய்கிறது.

சாய்ஸ்

அதற்காகத்தான், மக்களையே முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தேர்ந்தெடுக்க கெஜ்ரிவால் தேர்ந்தெடுக்க சொன்னர்.. இதற்காகவே, “ஜனதா சுனேகி ஆப்னா சி.எம்” என்ற பெயரில் புதிய திட்டத்தை மக்களிடம் அறிமுகம் செய்து, 2 பெயர்களையும் சிபாரிசு செய்தார்..

ஒருவர் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர் பக்வந்த் சிங் மான் மற்றும் மாநில பொறுப்பாளர் ராகவ் சதா ஆகியோரில் ஒருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்த போவதாகவும், தங்களுக்கு பிடித்தமான முதல்வர் வேட்பாளரை பொதுமக்கள் இலவச தொலைபேசி மூலம் முன்மொழியலாம் என்று சாய்ஸ் தந்தார். இறுதியில் பகவந்த் சிங் மான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

கெஜ்ரிவால்

யார் இந்த பகவந்த்மான்சிங்? 48 வயதாகிறது.. ஆரம்பத்தில் இவர் ஒரு நகைச்சுவை நடிகர்.. அதிலும் ஸ்டாண்ட் அப் காமெடிகளில் மிகசிறந்தவர்.. தன்னுடைய மாநிலத்தில் நடக்கும் முக்கிய அரசியல் நிகழ்வுகளை, டைமிங், ரைமிங் கலந்த காமெடிகளில் சொல்லவும், அது மக்களிடம் விரைவாக சென்றடைந்தது..

குறுகிய காலத்திலேயே ஃபேமஸ் ஆனார்.. பிறகுதான் அரசியலுக்குள் நுழைந்தார்… பஞ்சாப் மக்கள் கட்சி என்ற கட்சியில்தான் 2011-ல் சேர்ந்தார். அந்த கட்சியின் 2012-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் லெஹ்ரா தொகுதியில் வேட்பாளராக களமிறங்கினார்… ஆனால் தோல்வியுற்றார்..

ரீ-என்ட்ரி

பிறகுதான் 2014-ல் பஞ்சாப்புக்கு என்ட்ரி தந்த ஆம் ஆத்மியில் தன்னை இணைத்து கொண்டார்.. உடனே எம்பி தேர்தலில் அவருக்கு சீட் தரப்பட்டது.. சொந்த தொகுதியான சங்ரூரில் போட்டியிட்டு அபாரமாக வென்றார்.. அதிலும், பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த அகாலிதளத்தின் தலைவரான சுக்தேவ் சிங் திண்ட்சாவை, 2 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார் பகவந்த்மான்சிங்.

தனிப்பிரியம்

அப்போதிருந்தே ஆம் ஆத்மியின் முக்கிய நபராகிவிட்டார்.. இவர்மீது கெஜ்ரிவாலுக்கு தனிப்பிரியம் உண்டு.. அதனால்தான், 2017 தேர்தலுக்குப் பிறகு, பகவந்த் ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டார்.. இந்த முறை இவரைதான் முதல்வர் வேட்பாளர் என்று கெஜ்ரிவால் முன்னதாகவே அறிவித்திருப்பார்.. ஆனாலும் மக்கள் மனதையும் அறிய விரும்பினார்..

நெருக்கமானவர்

பகவந்த்மான் சிங்கை மக்களிடம் முதல்வர் வேட்பாளராக அறிமுகப்படுத்தும்போது, பக்வந்த்சிங் மான் நமக்கு நெருக்கமானவர்.. என்னுடைய தம்பி மாதிரி.. கட்சியில் செல்வாக்கு பெற்றவர்… அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடிவு செய்தோம்… ஆனால், அவர்தான், மக்களே அதை தீர்மானிக்கும் என்று சொல்லிவிட்டார்” என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது..

விமர்சனங்கள்

அதேசமயம், பகவந்த் மான் மீது விமர்சனங்கள், சர்ச்சைகள் இல்லாமல் இல்லை.. அபரிமிதமாகவே உள்ளது.. இவரது மதுப்பழக்கமாகட்டும், தண்ணி அடித்துவிட்டு பொதுவெளியில் தள்ளாடி நடந்து சென்ற வீடியோக்களாகட்டும், மக்களிடம் பதிந்துவிட்டன.. அதனால்தான் ஒருமுறை இனிமேல் நான் தண்ணி அடிக்க மாட்டேன், இது என் அம்மா மேல சத்தியம் என்றுகூட மக்கள் முன்பு சொல்லியிருந்தார்.

சத்தியம்

இப்படி எத்தனையோ சர்ச்சைகள் அவர் மீது இருந்தாலும் சமீபத்தில் நடந்து முடிந்த சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் மொத்த சர்ச்சைகளையும் நொறுக்கி தள்ளிவிட்டார் பகவந்த் சிங். 35 வார்டுகளில் 14 வார்டுகளை ஆம் ஆத்மி பெறுவதற்கு காரணமாக இருந்ததே பகவந்த் சிங்தான்.,. பகவந்த்மான் சிங்கை கெஜ்ரிவால் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகவில்லை.. தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறார்..!

Previous Story

பஞ்சாப் ஆம் ஆத்மி வசம்!

Next Story

பன்றி இதய  மனிதன் உயிரிழந்தார்