USA,கனடா: ராஜபக்சர்கள் சொத்துக்கள் முடக்கம்!

அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள ராஜபக்சர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு இறுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் ராஜபக்சர்களின் பல சொத்துக்கள் ஆப்பிரிக்காவில் உள்ளது.  அவையும் தற்போது இறுக்கப்பட்டு வருகின்றன என்று இந்தியாவின் இராணுவத்தின் முன்னாள் மேஜர் தர அதிகாரி மதன்குமார் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

13ஆவது சீர்த்திருத்தம் குறித்து இலங்கைக்கு வேறு வழியில்லை.  13ஆவது சீர்த்திருத்தம் என்பது இரு நாடுகளுக்கு போடப்பட்ட ஒப்பந்தம்.  இரு நாட்டு தலைவர்கள் அதில் கையெழுத்திட்டுள்ளனர்.

அதாவது, ஜெயவர்தன அவர்களும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள்.

இலங்கைக்கு உள்ள தார்மீக பொறுப்பு

அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள ராஜபக்சர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன! வெளியாகும் தகவல் | Properties Of Rajapaksa In Usa And Canada

அந்த ஒப்பந்தம் தொடர்பான தார்மீக பொறுப்பு இலங்கைக்கு உண்டு.  ஆனால், அதனை மிகவும் தாமதித்து விட்டார்கள். கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேல் தாமதித்து விட்டார்கள்.

மேலும், இலங்கையில் இப்போது, எந்தவொரு சிங்கள அரசியல்வாதியும் நான் சீனாவின் அடிமையாக போய்விடுகின்றேன்.  நாங்கள் சீனாவின் ஆதரவில் இருக்கலாம் என்று கூறி  இலங்கையில் ஒரு அரசியலை நடத்த முடியாது.

இப்போதிருக்கும் நிலை படி, ராஜபக்சர்களின் செல்வாக்கு என்பது

ஒருகாலத்தில்  80 சதவீதமாக காணப்பட்டது.

இரண்டு அல்லது ஒன்றரை வருடங்களுக்கு முன்னர்

இந்த நிலை காணப்பட்டது. எனினும்,

தற்போது அது 8 சதவீதமாக மாறியிருக்கின்றது.” 

ஏற்கனவே கூறியது போல அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் உள்ள ராஜபக்சர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு இறுக்க ஆரம்பித்துள்ளார்கள்.  அவர்களின் பல தொழிற்சாலைகள் ஆப்பிரிக்காவில் உள்ளது.  அவற்றையும் தற்போது இறுக்குகிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசியலமைப்பின் 13 ஏ சீர்த்திருத்தம் குறித்து பலர் என்ன நினைக்கின்றார்கள் என்றால் இதனை  கொண்டு வந்து விட்டால் தீர்வு கிடைத்துவிடும் முடிவு கிடைத்துவிடும் என்று.  ஆனால், அந்த பிரச்சினை முடிவதற்கான ஒரு நல்ல துவக்கம் தான் 13ஏ என குறிப்பிட்டுள்ளார்.

Previous Story

"சிங்கள மக்கள் இனி ஒருபோதும்  இனவாதத்துக்குள் சிக்கமாட்டார்கள்"

Next Story

நாட்டு மக்கள் அணி திரள்வது உறுதி..! கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் -