USA பிளாய்டை கொன்ற போலீஸ் அதிகாரிக்கு மேலும் 21 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பினத்தவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிக்கு ஏற்கனவே 22 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான மற்றொரு வழக்கில் அப்போலீஸ் அதிகாரிக்கு மேலும் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

US, George Floyd, Ex Cop, 21 Years, Prison, Violating, Civil Rights, அமெரிக்கா, ஜார்ஜ் பிளாய்டு, போலீஸ் அதிகாரி, சிறை, சிவில் ரைட்ஸ், பொது உரிமைகள், தண்டனை

அமெரிக்காவில் கடந்த 2020ம் ஆண்டு மே 25ம் தேதி அமெரிக்காவின் மினியாபோலிசில், ஜார்ஜ் பிளாய்டு, 46, என்ற கறுப்பினத்தவர், ஒரு கடையில், கள்ள நோட்டு கொடுக்க முயன்றதாக புகார் எழுந்தது. அதையடுத்து, அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தினர். கைகளை பின்பக்கமாக கட்டி, கீழே வீழ்த்தினர். அதில், ஒரு போலீஸ் அதிகாரி, பிளாய்டின் கழுத்தின் மீது, தன் கால் முட்டிகளால் நெருக்கியுள்ளார். மூச்சுவிட முடியாமல், பிளாய்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான, ‘வீடியோ’ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

latest tamil news

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி, டெரக் சாவ்வின், 45, உள்ளிட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, 12 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் டெரக் சாவ்விற்கு 22 ஆண்டுகள் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதனால் சிறைவாசம் அனுபவித்து வரும் டெரக் சாவ்வின் மீது, ஜார்ஜ் பிளாய்ட்டின் பொது உரிமைகளை (சிவில் ரைட்ஸ்) பாதுகாக்க தவறியதோடு, அதனை மீறியதாக ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் டெரக் சாவ்வினுக்கு 20 முதல் 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வேண்டும் என ஜார்ஜ் பிளாய்டின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வலியுறுத்தினார். அவரது வாதத்தை அடுத்து, நீதிபதி, டெரக் சாவ்வினுக்கு மேலும் 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். நீதிபதியின் தீர்ப்பை ஜார்ஜ் பிளாய்டு குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.

Previous Story

காஷ்மீரின்  மேக வெடிப்பு? -  பக்தர்கள் 17 பேர் உயிரிழப்பு

Next Story

  'ஞான' அறிக்கை குப்பையில்!