UN-19 உலகக் கோப்பை கிரிக்கெட் 2022

 இந்தியாவுக்கு வாய்ப்பு

தற்போது போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதுமுதலில் துடுப்பாடும் இங்கிலாந்து தற்போது  111/ 7 என்ற நிலை. இதனால் களம் இந்தியாவுக்கு அதிக வாய்ப்பைக் கொடுத்திருக்கின்றது. 111/7    28/4 ஓவர்

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இந்திய நேரப்படி இன்று மாலை 6:30 மணிக்கு 19 வயதுக்கும் குறைவானவர்களுக்கான அண்டர்-19 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற உள்ளது.

மேற்கிந்திய தீவுகளின் ஓர் அங்கமான ஆன்டிகுவா மற்றும் பார்புடாவிலுள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி இன்று நடைபெற உள்ளது.

1988ஆம் ஆண்டு முதல் முறையாக அண்டர்-19 உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

அதன்பின்பு 1998ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அண்டர்-19 உலகக் கோப்பை தொடர் நடந்து வருகிறது.

யஷ் துல் தலைமையிலான இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 96 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்டின் உலக கோப்பை போட்டியின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதற்கு முன்பு கடைசியாக 1998ஆம் ஆண்டுதான், அண்டர்-19 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாடியது இங்கிலாந்து. அப்போது நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வென்றது.

ஆனால் இந்தியா இன்று தமது எட்டாவது ஆண்டில் உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாட உள்ளது. இதுவரை விளையாடியுள்ள ஏழு இறுதிப் போட்டிகளில் நான்கு போட்டிகளில் வென்ற இந்தியாதான் அண்டர்-19 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை அதிக முறை வென்ற அணியாகும்.

Previous Story

அநுரகுமாரவைப் படுகொலை செய்யச் சதி - விஜித ஹேரத்  

Next Story

கண்டி கார்சல் லேன் கிரிக்கட் சுற்றுப் போட்டி 2022