தான் ஒரு குளிர் பானத்துக்கு அடிமை என்று சொல்லியிருக்கிறார் பிரித்தானிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனக். ஒரு முறை அவரிடம் ஜாலியாக ஊடகவியலாளர்கள் பேட்டி எடுக்கும்போது இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார் ரிஷி.
தான் ஒரு குளிர் பானத்துக்கு அடிமை என்று வெளிப்படையாகவே சொல்லியிருகிறார் ரிஷி சுனக்.
அந்த பானம், கோகோ கோலா.
இளம் வயதில் எக்கச்சக்கமாக இந்த கோகோ கோலாவைக் குடித்து பற்களுக்குக் கூட பாதிப்பு ஏற்பட்டதுண்டு என்று கூறியுள்ளார் அவர்.
ஆனால், இப்போதெல்லாம் வாரத்தில் ஒரு நாள் ஒரு முறை மட்டுமே கோக் குடிக்கிறாராம் அவர்.
இன்னொரு முக்கிய விடயம், ரிஷி மதுபானம் அருந்துவதில்லையாம்!