Uk: ஒரே நாளில் 1 லட்சத்தை தாண்டியது ‘ஒமைக்ரான்’

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் ‘ஒமைக்ரான்’ வகை கொரோனா வைரஸ் பரவல் ஒரு லட்சத்தை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டனில் கடந்த 17ம் தேதி, 25 ஆயிரம் பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதியானது. இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழு பேர் இதுவரை உயிர் இழந்துள்ளனர்.


இந்நிலையில் நேற்று (டிச.23) ஒரே நாளில் ஒமைக்ரான் வகை தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1,லட்சத்து 6 ஆயிரத்து,122 ஆக அதிகரித்துள்ளதாகவும், 140 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.

‘தொற்று கட்டுப்பாட்டு விதிகளை தீவிரப்படுத்தாவிட்டால், ஒரே நாளில் 3,000 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும்’ என, பிரிட்டன் அரசின் அவசரகால அறிவியல் ஆலோசனை குழு எச்சரித்துள்ளது.

 

Previous Story

கல்முனை: மீன்களை அள்ளும் மீனவர்கள்

Next Story

ஷிராஸ் நூர்தீன்க்கு முக்கிய பதவி!