SRI LANKA ஜனாதிபதிக்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டம்

பிரித்தானியாவில் அமைப்பொன்றின் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக intercontinental park lane hotel இல் இலங்கை ஜனாதிபதி ரணில் தங்கியிருந்துள்ளார்.இதனை அறிந்த பிரித்தானியாவை சேர்ந்த தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இதன்போது சுமார் 25 பொலிஸார் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை சந்தித்து, அவர்கள் போராட்டத்திற்கு பயன்படுத்திய கொடி தடை செய்யபட்டது என கூறியதாகவும் அதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இது தடை செய்யப்பட்ட கொடியல்ல எனவும் இது தமிழர்களின் கொடி எனவும் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் தமிழீழ தேசியக்கொடிக்கு தடையில்லை! அங்கீகாரம் அளித்த பிரித்தானிய பொலிஸார் | Protest In Britain Against President Ranil

இது தொடர்பில் ஆராய்ந்த பொலிஸார் தமிழ் மக்களின் கொடியை பயன்படுத்தலாம் எனவும் அவர்கள் வேறு கொடி என நினைத்து தவறாக கூறியதாகவும் மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய விடுதலைப் புலிகளின் கொடிக்கு பிரித்தானிய பொலிஸார் அங்கீகாரம் அளித்ததாக கூறப்படுகின்றது.

இதனை தொடர்ந்து தற்போது பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு அருகில், இலங்கை ஜனாதிபதி ரணில் இரண்டாவது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போவதாகவும் அங்கும் போராட்டம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பிரித்தானியாவில் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதிய உலகளாவிய நிதிய ஒப்பந்தத்திற்காக நடத்தப்படும் உலக தலைவர்கள் உச்சி மாநாட்டின் உயர்மட்ட குழு விவாதத்தில் உரையாற்றுவதற்காக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரான்ஸ் சென்றுள்ளார்.

பிரித்தானியாவில் தமிழீழ தேசியக்கொடிக்கு தடையில்லை! அங்கீகாரம் அளித்த பிரித்தானிய பொலிஸார் | Protest In Britain Against President Ranil

எதிர்ப்பு போராட்டம்

இதன் பின்னர் பிரித்தானியாவுக்கும் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பிரித்தானியாவில் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Gallery Gallery Gallery

Previous Story

அரபு நாடுகளில் சீனாவின் ஆதிக்கம்: இந்தியாவுக்கு பாதிப்பா?

Next Story

புனித ஹஜ் பெருநாள் JUNE 29 OK...!