-நஜீப் பின் கபூர்-

ஹக்கீம் வாக்குறுதிகள் காற்றில் பறந்து விட்டது. நாம் சில தினங்களுக்கு முன்னர் எமது இணையத்தில் பதிவு செய்திருந்தபடி அனைத்து இடங்களிலும் ஹக்கீமின் கட்சி வேட்புமனுக்கள் வெளியேற்றப்பட்டு விட்டது.
இது தலைவரின் திட்டமிட்ட ‘டீல்’ என்று பல இடங்களில் இருந்து வேட்பாளர்களும் தொண்டர்களும் செய்தி சொல்லும்படி நமக்குக் கட்டாயப்படுத்தியதற்கமைய இந்தப் பதிவு.
அத்துடன் நாம் முன்பு இது தொடர்பாகப் பதிந்த செய்தியையும் இங்கு மீளவும் பதிவு செய்கின்றோம். போராளிகளே இப்படி ஒரு நயவஞ்சகத் தலைமை உங்களுக்குத் தேவைதானா சிந்தித்துப்பாருங்கள்.
நல்ல வாய்ப்பிருந்த பாததும்பற ஹேவாஹெற்ற யடிநுவர அகுரண போன்ற அனைத்து இடங்களிலும் இந்த நிலை. கட்சி விலைபோய் விட்டது.!
‘பீடி’
முக்கிய குறிப்பு: சில மணித்தியாலங்கள் அல்லது ஒரு நாளைக்கு முன்பாக இப்படி ஒரு செய்தி பதிவாகி இருந்தது…
தலைவர் ஹக்கீம் கடும் சுகயீனத்தால் வைத்தியசாலையில் 4 நாட்கள் இருந்து தற்போதுதான் வீடு திரும்பி இருக்கின்றார்.
அவரது சுகத்திற்கு பிராத்திக்குமாறு அதில் ஒரு வேண்டுகோளும் விடுக்கப்பட்டிருந்தது. இது ஒரு ‘பீடி’ என்பது உங்களுக்கு புரிகின்றதா.?
ஐயோ தலைவரை தொந்தரவு பண்ணிவிடாதீர்கள்…! எப்படி இருக்கின்றது இந்த நாடகங்கள். இவை எல்லாம் திட்டமிட்ட ஏற்பாடுகள்தான். கிழக்கு முஸ்லிம்களே இப்படி ஒரு தலைமை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்.
அரசியல் வியாபாரிகளின் முகவர்களாக-ஏஜெண்டுகளாக இருந்து சமூகவிரோதிகளாக இன்னும் செயல்படப்போகின்றீர்களா..! சிந்தியுங்கள்!!
************************
நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் கதி!






