ரணிலை ஏமாற்றியது போல சஜித்தை ஏமாற்ற முடியாது என்று அந்தக் கட்சியில் அரசியல் செய்தவர்கள் எதிர்பார்த்தனர். இந்த முறை சஜித் தனது கட்சிக்கார்களுக்குத் தான் முன்னுரிமை தந்து கண்டியில் சீட்டுத் தருவார் என்று சிலர் கனவு கண்டனர்.
ஆனால் ரணிலை ஏமாற்றிய
பாணியிலே சஜித்தையும் ஹக்கீம் ஏமாற்றி
சீட்டு வாங்கிக் கொண்டார்.
ஆனால் இன்று கண்டி மாவட்டத்தில்
ஒரு 5000 வாக்குகள் கூட
மு.கா.வுக்குக் கிடையாது.
ஆனால் தேர்தல் வரும் போது மட்டும் கண்டி மாவட்டத்தில் இருக்கும் ஐதேக-ஐமச காரர்களை ஏமாற்றி மு.கா. தலைவர் ஒரு இலட்சம் அல்லது 80 ஆயிரம் வரை வாக்குகளை கொள்ளையடித்து விடுகின்றார்.
இது அந்தக் கட்சிகாரர்களில் அப்பாவித்தனமா மூளை வளர்ச்சியில் உள்ள குறைபாடா என்பது புரியாமல் இருக்கின்றது.
இந்த முறை சீட்டை நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்த ஒருவர் ஹக்கீமை நேரடியாக சந்தித்து தனக்கு விட்டு தந்து நீங்கள் தேசிய பட்டியலில் வாருங்கள் என்று கெஞ்சி இருக்கின்றார்.
ஆனால் ஹக்கீம் கண்டி முஸ்லிம்களுக்கு இன்னும் செய்ய வேண்டிய சேவைகள் கொஞ்சம் மிச்சமிருக்கின்றது. என்று கூறி அவர் கோரிக்கையை நிராகரித்திருந்தார்.
ஆனால் சீட்டுக் கேட்டவரோ தேசிய பட்டியலில் வந்து அதனைச் செய்யலாமே என்று திரும்பக் கேட்க தேசிய பட்டியலில் வருவது தனக்கு கௌரவமில்லை என்று கூறி அடம்பிடித்தவர் குரலை அடக்கி இருக்கின்றார் ஹக்கீம்.
நாங்கள் எப்போதும் ஜனாதிபதி பக்கம் இருந்தவர்கள்தான் இந்தமுறையும் அப்படித்தான் இருப்போம் என்று இப்போது ஹிஸ்புல்லாஹ் பகிரங்கமாக பேசிக் கொண்டிருக்கின்றார்.
எனவே ஐமச. வுக்கும் முகா.வுக்கும் இப்போது கூட்டணி முறிந்து விட்டது என்பதுதான் அதன் அர்த்தம். அப்படி இருக்க எப்படி சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாலர்கள் கண்டியில் ஹக்கீமுக்கு வாக்களிக்க முடியும்- வேலை செய்ய முடியும்?
இந்த முறையும் அதே பாணியில் சஜித் கட்சிக்காரர்கள் கண்டியில் ஹக்கீமுக்கு வாக்குக் கொடுத்து ஏமாறித்தான் ஆக வேண்டும் என்ற பிடிவாத்தில் இருக்கின்றார்களா அல்லது அதற்கு மாற்று வழியில் பதில் கொடுக்கப் போகின்றார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.