BJP பெரும்பான்மை பெறாத நிலையில், காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியுமா?

இந்தியத் தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருந்தாலும் தனிப் பெரும்பான்மையைப் பெறுவது கடினம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணி, தாக்கம் ஆகியவை குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் உரையாடினார் மூத்த பத்திரிகையாளர் ஆர். மணி அவருடைய உரையாடலில் இருந்து:

Lok Sabha Election 2024 Results LIVE: A hattrick for PM Modi or is there a surprise in store? Results shortly - BusinessToday

தற்போதைய நிலவரத்தை வைத்துப் பார்க்கும்போது பா.ஜ.கவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப் பெரும்பான்மைக்கு 272 இடங்கள் கிடைக்க வேண்டும். அப்படிக் கிடைக்கவில்லை. இப்போதைய நிலவரப்படி 241 இடங்கள்தான் கிடைத்திருக்கின்றன. ஒட்டுமொத்தமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 293 இடங்கள் கிடைத்திருக்கின்றன.

பாஜக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியுமா?

முதல் ஆட்சிக் காலத்தில் பா.ஜ.கவுக்கு 282 இடங்கள் கிடைத்தன. இரண்டாவது ஆட்சிக் காலத்தில் 303 இடங்கள் கிடைத்தன. ஆனால் அது நடைமுறையில் பா.ஜ.க. ஆட்சியாகத்தான் இருந்தது. தனிப் பெரும்பான்மைக்கு சுமார் 30 இடங்கள் குறைவதால் இந்த முறை கூட்டணி ஆட்சிதான் அமையும் என்பதால், இதுதான் உண்மையான தே.ஜ.கூ. அரசாக இருக்கும். இதுவொரு சுவாரஸ்யமான நிகழ்வு.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க முயலுமா?

தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம்

கேள்வி: பா.ஜ.கவின் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளைத் தன் பக்கம் இழுத்து ஆட்சியமைக்க இந்தியா கூட்டணி முயலுமா?

பதில்: காங்கிரசிடம் தற்போது சுமார் தொன்னூற்று சொச்சம் இடங்கள்தான் உள்ளன. அதை வைத்துக்கொண்டு கூட்டணி ஆட்சி அமைப்பது கடினம். அப்படியே செய்தாலும் அது மக்கள் தீர்ப்புக்கு எதிரானதாக இருக்கும். நிதீஷ் குமாரும் சந்திரபாபு நாயுடுவும் தேர்தலுக்கு முன்பே பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்தவர்கள்.

ஆகவே மக்கள் மோதி தலைமையிலான கூட்டணிக்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள். இதுபோன்ற சித்துவேலைகளை காங்கிரஸ் கட்சி செய்தால் அது அவர்களுக்கு எதிராக முடியும். ஒரு எச்சரிக்கையுடன், தே.ஜ.கூ. அரசு நீடிக்க வேண்டுமென்றுதான் மக்கள் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.

மேலும் 50 எம்பிக்களை தங்கள் பக்கம் இழுத்து, இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க முடியும். ஆனால், இது மிக மோசமான நடவடிக்கையாக இருக்கும். நிதீஷும் சந்திரபாபு நாயுடுவும் அதைச் செய்ய மாட்டார்கள் எனக் கருதுகிறேன். பா.ஜ.கவுடனேயே இருந்து, அவர்களைத் தங்கள் வயப்படுத்தி, வாஜ்பேயி அரசைப் போன்ற ஒரு அரசை நடத்த விரும்புவார்களே தவிர, காங்கிரஸ் பக்கம் வந்து ஒரு அரசை அமைக்க விரும்ப மாட்டார்கள்.

இந்தியா கூட்டணியில் நிறைய கட்சிகள் இருக்கின்றன. அங்கு போய் சேர்ந்து ஒரு அரசை நடத்திச் செல்வது இயலாது. ஆனால், பா.ஜ.கவுடன் இருந்து பல கட்டுப்பாடுகளுடன் ஒரு அரசை நடத்திச் செல்ல முடியும்.

உத்தர பிரதேசத்தில் என்ன நடந்தது?

தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம்

“மோதி முழு பெரும்பான்மையுடன் மீண்டும் பிரதமர் ஆகியிருந்தால் யோகியை உத்தர பிரதேச அரசியலில் இருந்து அகற்றி டெல்லிக்கு கொண்டு வந்திருப்பார்.”

கேள்வி: இந்த முறை உத்தர பிரதேசம் ஆச்சரியகரமான முடிவைத் தந்திருக்கிறது. பா.ஜ.கவுக்கு வலுவான தளமாகக் கருதப்படும் இந்த மாநிலம், இந்த முறை சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக இடங்களைத் தந்திருக்கிறது. அங்கே என்ன நடந்திருக்கிறது?

பதில்: இது சுவாரஸ்யமான நிகழ்வு. உத்திர பிரதேசத்தில் ‘டபுள் எஞ்சின்’ அரசை நடத்துவதாகச் சொன்னார்கள். ராமர் கோவிலைக் கட்டினார்கள். குஜராத்துக்கு அடுத்தபடியாக இந்துத்துவத்தின் சோதனைச் சாலை என்றார்கள். அப்படி இருந்த மாநிலத்தில் எப்படி இந்த நிலை ஏற்பட்டது என்பதை என்னால் இந்தத் தருணத்தில் புரிந்துகொள்ள முடியவில்லை.

இதைப் புரிந்துகொள்ள இன்னும் சில நாட்கள் தேவைப்படலாம். ஏனென்றால் மத்திய பிரதேசத்தில் அனைத்து இடங்களையும் பெற்றுவிட்டார்கள், சத்தீஸ்கரில் பெரும்பான்மை இடங்களை வென்றார்கள். உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற இடங்களில் பெரும்பான்மை இடங்களை வென்று விட்டார்கள். இந்துத்துவ சோதனைச் சாலையின் மையமாக இருக்கக்கூடிய மாநிலம் உத்தர பிரதேசம். அங்கே பாதிக்கும் மேற்பட்ட இடங்களை பா.ஜ.க. இழப்பது ஏன் எனப் புரியவில்லை. அங்கே இத்தனை இடங்களை இழந்ததால்தான் பாரதிய ஜனதா கட்சியால் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. இது ஒரு கவனிக்கத்தக்க நிகழ்வு.

India elections 2024: Vote to be held in seven stages - BBC News

இன்னொரு விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன். அதாவது, உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பிரதமர் மோதிக்கு போட்டியாகப் பார்க்கப்படுபவர். மோதி முழு பெரும்பான்மையுடன் மீண்டும் பிரதமர் ஆகியிருந்தால் யோகியை உத்தர பிரதேச அரசியலில் இருந்து அகற்றி டெல்லிக்கு கொண்டு வந்திருப்பார். அவர் எப்படி குஜராத் மாநிலத்தில் 12 – 13 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து, பிரதமர் ஆனாரோ அதுபோல யோகி ஆகாமல் பார்த்துக் கொண்டிருப்பார்.

இப்போது உத்தர பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் தோல்வி மோதியின் தோல்வியா அல்லது யோகியின் தோல்வியா என்று ஆராயப்படும். மூன்றாவது முறையாக மோதி பிரதமர் ஆவதற்கு உள்ளுக்குள்ளேயே சவால்கள் வரும். மோதிதான் மீண்டும் பிரதமர் ஆவார் என்று நம்புகிறேன். இந்த மூன்றாவது ஆட்சிக் காலத்தில் மோதிக்கான மிகப்பெரிய சவால் என்பது காங்கிரஸில் இருந்தோ இந்தியா கூட்டணியிடம் இருந்தோ வரப்போவதில்லை பா.ஜ.க. கட்சிக்குள் இருந்தும் ஆர்எஸ்எஸிடம் இருந்தும்தான் மிகப்பெரிய சவால்கள் வரப்போகின்றன. உ.பி. உணர்த்துவது இதைத்தான்.

தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம்

“50 எம்பிக்களை தங்கள் பக்கம் இழுத்து, இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க முடியும்.”

திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது எப்படி?

தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம்
,சித்தராமய்யா அரசு மீதான அதிருப்தியும் ஏற்கனவே அங்குள்ள இந்துத்துவா வாக்குகளும் சேர்ந்துதான் இந்த முடிவை தந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

கேள்வி: சட்டமன்றத் தேர்தல் நடந்து ஒரு வருடமே ஆன கர்நாடக மாநிலத்தில் கூடுதல் இடங்கள் பா.ஜ.கவுக்கு கிடைத்திருக்கின்றன. இது எப்படி நடந்தது?

பதில்: கர்நாடக மாநிலத்தில் கடந்த ஓராண்டில் ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி வளர்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. சிறுபான்மையினருக்கு கூடுதலாக சலுகைகளை வழங்குவதாகப் பலர் கருதினார்கள்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கப்படும் என்று அறிவித்ததால் பல இடங்களில் பெண்கள் கணக்குகளைத் துவங்குவதற்காக அஞ்சலக வாசலில் காத்திருந்தார்கள்.

இந்தப் போக்கிற்கு எதிராக வாக்குகள் விழுந்திருக்கலாம். ஆகவே, சித்தராமைய்யா அரசு மீதான அதிருப்தியும் ஏற்கெனவே அங்குள்ள இந்துத்துவா வாக்குகளும் சேர்ந்துதான் இந்த முடிவைத் தந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம்
“ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் தமிழ்நாட்டில் இருக்கவே செய்கின்றன. ஆனால், இந்த தேர்தலில் அந்த வாக்குகள் நான்காகப் பிரிந்து விட்டன.”

கேள்வி: தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. மாநிலத்தில் தி.மு.க. ஆட்சியில் இருக்கும் நிலையில் ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி இருக்கவே செய்யும்; அப்படி இருக்கும்போதும் இவ்வளவு பெரிய வெற்றியை திமுக கூட்டணியால் எப்படி பெற முடிந்தது?

பதில்: நான் இந்த வெற்றியை மோதிக்கு எதிரான தீர்ப்பாகப் பார்க்கிறேன். தி.மு.க. அரசுக்கு ஆதரவான வாக்குகளாகப் பார்க்கவில்லை. 2014, 2019 ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் மோதிக்கு எதிரான உணர்வு எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் தமிழ்நாட்டில் இருக்கவே செய்கின்றன. ஆனால், இந்தத் தேர்தலில் அந்த வாக்குகள் நான்காகப் பிரிந்துவிட்டன. திமுக ஒரு வலுவான கூட்டணியை அமைத்து 49 சதவீத வாக்குகளை வைத்திருக்கிறது.

India Elections 2024: How will the voting work?

ஆனால், எதிர்தரப்பில் பா.ஜ.க. தனியாக நின்றது. அ.தி.மு.க. தனியாக நின்றது. நாம் தமிழர் கட்சி தனியாக நின்றது. இதனால் வாக்குகள் பிளவுபட்டன. 2019இல் இருந்ததைப்போல அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க. ஆகியவை இணைந்து தேர்தலை எதிர்கொணடிருந்தால் 10 முதல் 12 இடங்களை அவர்கள் பெற்றிருக்க முடியும்.

வாக்குகள் இப்படி நான்காகப் பிரியும்போது தி.மு.க. பெரும் வெற்றியைப் பெறும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். இந்தத் தேர்தல் முடிவை வைத்து தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிரான நிலைப்பாடு இல்லை என்று புரிந்துகொள்வது தவறு.

Previous Story

அணுராவுக்கு 50 கோடி லொடரி!

Next Story

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியாவை முந்திய அமெரிக்கா!