MAY-6 தேசிய ஹர்த்தால்

“வரும் 6ம் திகதியுடன் நிலமை மோசமடையும்”

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வருகின்ற 6ம் திகதியுடன் புது வடிவம் எடுக்குமென நாம் எதிர்பார்க்கின்றோம். இதுவரை அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஒரு சாத்வீக வழியில்தான் நடந்து வந்திருக்கின்றது. நாம் அறிந்த உலக வரலாற்றில் இந்தப் போராட்ட வடிவம் புதியது உலகுக்குப் பரீட்சிதம் இல்லாதது.

அரசுக்கு எதிரான இந்தப் போராட்டம் ஒருவகையில் கலியாட்டம் போல் பார்வைக்குத் தெரிந்தாலும் அதன் ஆணி வேர் பொருளாதர நெருக்கடியில் இருந்துதான் துவங்குகின்றது. இப்போது இந்தப் பொருளாதரா நெருக்கடியைத் தீர்க்க வேண்டுமானால் அரசியல் ஊடகத்தான் அதனை செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக்க கருத்துக்கள் இருக்க முடியாது.

மக்களும் இளைஞர்களும் தமக்குள்ள கோபம் அல்லது அதிர்ப்த்தி காரணமாக 226 பேரும் (ஜனாதிபதியுடன் சேர்த்து) வெளியே போ என்று கோஷமிடுகின்றார்கள். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமில்லை. இந்த அரசு கலைக்கப் பட்டு பொதுத் தேர்தல் நடைபெற்று புதிய நாடாளுமன்றம் அமைகின்ற போதும் இதில் கணிசமானவர்கள் உள்ளே வந்து விடுவார்கள்.

நமது நாட்;டில் வேட்பாளர்களின் வெற்றி பெரும்பாலும் பணப் பலத்தில்தான் தீர்மானம் ஆகின்றது என்பது எமது கருத்து. எனவே தேர்தலில் பணத்தை வீசி உள்ள நுழைய அதிக வாயப்புக்கள் இருக்கின்றன. அந்தக் கதைகள் அப்படி இருக்க வருகின்ற ஆறாம் திகதி முதல் நாட்டில் ஹர்த்தல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள. இது அரசுக்கு பல நெருக்கடிகளை உண்டு பண்ணும்.

ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட முழு அமைச்சும் பதவி விழக வேண்டும் என்று அரசுக்கு எதிரான சாத்திவீகப் போராட்டம் வெற்றிகரமாக நடந்து வருகின்றது. அதற்கு ஒரு மாதம் என்ற அளவும் நெருங்கி வருகின்ற நிலை. இதனால் இந்த ஹர்த்தாலுடன் போராட்டம் மேலும் கடுமையாக இடமிருக்கின்றது என்று நாம் நம்புகிறோம்.

1956ம் ஆண்டில் இப்படி ஒரு ஹர்த்தல் நாட்டில் நடந்திருக்கின்றது. தற்போதய பின்னணியில் இந்த ஹர்த்தலும் அரசுக்கு பெரும் சவலாக அமையும் என்று நாம் நம்புகின்றோம். அன்று முழு அமைச்சரவையும் ஹர்த்தாலுக்குப் பயந்து கடலில் இருந்த கப்பலில் போய் ஏறிக் கொண்டார்கள். ஆனால் இன்று ஆட்சியாளர்களுக்கு அதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றுதான் கூறவேண்டும். கடலில் அல்ல மரியான ஆழிக்குள் போய் பதுங்கிக் கொண்டாலும் அங்கும் ராஜபக்ஸாக்களை விரட்டுகின்ற மன நிலையில்தான் மக்கள் இருக்கின்றார்கள்.

வரும் ஆறாம் திகதி ஹர்த்தல் துவங்குகின்ற போது நமக்கு வருகின்ற தகவல்களின் படி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட இடமிருக்கின்றது. வேலை நிறுத்தம் கடையடைப்பு என்றெல்லாம் ஹர்த்தல்களில் நடப்பதுண்டு. அரசுக்கு ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தி இந்த ஹர்த்தலை தடுத்து நிறுத்தவும் முடியாது.

மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதுடன் இதுவரை பெருமையாக இருந்த அரச எதிர்ப்பார்கள் முழு நாட்டிலும் வீதியில் இறங்குவதற்கான ஏற்பாடுகளும் நடப்பதாகத் தெரிகின்றது. நிலமையைப் புரிந்து கொண்டு ஆளும் தரப்பு பின்வாங்கி மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி விட்டால் நல்லது  அப்படி இல்லாது அவர்கள் பிடிவாதமாக நடந்தால் நாட்டு நிலமை மேலும் மோசமடையும்.

6ம் திகதி துவங்கும் ஹர்த்தல் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டுத்தான் ஓயும் என்று சபதம் போடுகின்றார்கள் தொழிற்சங்கத் தலைவர்கள். ஆகவே நிலமை நெருக்கடி மிக்கதாக அமைய அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

Previous Story

சிராஸ் நூர்தீன் ராஜினாமா

Next Story

ராஜபக்சர்கள் தன் மீது கடும் அச்சத்தில் - சரத் பொன்சேகா