தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுக்கு வீரவணக்க நிகழ்வு இடம்பெற்றுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் அவர்களின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காகவும் இறுதிவரை போராடி 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் நந்திக்கடலோரம் விடுதலைப்புலிகள் தலைவர் தனது இன்னுயிரை ஆகுதியாக்கினார்.
அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் சுவிட்ஸர்லாந்தில் வீரவணக்க நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது பல புலம்பெயர் ஈழத்தமிழர்கள் கலந்து கொண்டு அவருக்கு மரியாதை செலுத்தினர்.
நிகழ்வின் போது மண்டபத்திற்கு வெளியில் சிலர் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட வேளையில் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.