JVP யும் சிறுபான்மை சமூகங்களும்!

-நஜீப்-

தற்போது ஜேவிபி தலமையிலான தேசிய மக்கள் சக்தி (என்பிபி) தெற்கில் வெற்றிகரமான அரசியல் கூட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றது. அதில் ஒரு கவர்ச்சியும் கட்டுக் கோப்பும் தெரிகின்றது.

புத்திஜீவிகள் நிறையப்போர் அந்தக் கூட்டங்களில் கலந்து கொள்வதையும் பார்க்க முடிகின்றது. அரசியல் கட்சிகளைத் தம்மோடு இணைத்துக் கொள்வதற்குப் பதிலாக அவர்கள் சிவில் அமைப்புக்களையும் சமூகத்தையும் தன்னோடு இணைத்துக் கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றார்கள்.

நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகத்தை தன்னோடு இணைத்துக் கொள்வதில் அவர்கள் மத்தியில்  ஆர்வமே திட்டங்களோ இல்லை என்று நமக்கு எண்ணத் தோன்றுகின்றது. இதற்குக் காரணம் அதற்குத் தேவையான நம்பகத் தன்மையான ஆளணி அவர்களிடத்தில் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அவர்கள் எமது வேலைத் திட்டம் பொதுவானது இன ரீதியானதோ மொழி ரீதியானதோ அல்ல என்று வாதிடவும் இடமிருக்கின்றது. ஆனால் இன மொழி ரீதியான புரிதலும் தனித்துவங்களும் தவிர்க்க முடியாதது என்பதனை அவர்கள் ஜீரணித்துக் கொள்ள வேண்டும்.

தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் பரந்து பட்ட ரீதியில் தமது செய்திகளை முன்னெடுத்துச் செல்ல அவர்களிடத்தில் தனியான வேலைத் திட்டமொன்றும் ஊடக செயல்பாடுகளும் காலத்தின் தேவையாகும் என்பதனை அவர்கள் உணர வேண்டும்.

நன்றி: 01.01.2023 ஞாயிறு தினக்ககுரல்

Previous Story

போதைப் பொருள் பயன்படுத்துபவரின் திருமணத்தை நடத்த மறுத்த பள்ளிவாசல் ?

Next Story

கானா:உலகின் உயரமான மனிதர் 9.6 அடி