IMF: நாடுவது .வெளியான தகவல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை அணுக வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் மத்திய வங்கி ஏற்கனவே அரசாங்கத்திடம் விசேட யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் விருப்பத்துடனோ விருப்பமின்றியோ தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண மூன்றாம் தரப்பினரின் உதவியை நாட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

எப்படியிருப்பினும் நாட்டின் நன்மை தீமைகளை உன்னிப்பாகக் கண்காணித்து அதற்கான செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவ்வாறு செயற்படாவிட்டால் தற்போதைய நெருக்கடி மேலும் அதிகரிக்கலாம் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Previous Story

சரணடைய உக்ரைன் மறுப்பு

Next Story

உக்ரைன் போர்: இந்தியா நிலைப்பாடு பிடன் விமர்சனம்!